பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 125 இரண்டாவது காரணம், அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்படவேண்டுமாயின், பாராளுமன்றம் மற்றொரு அரசியல் நிர்ணய சபையை அமைக்க சட்டமியற்றியாக வேண்டும் என்பது.2 உச்சநீதி மன்ற இம்முடிவுக்கு மாறான கருத்தைத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், "மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களாக 768 உறுப்பினர்களைக் கொண்ட இப்போதைய பாராளுமன்றத்தில், மக்களவை உறுப்பினர்கள் 525 பேர் மக்களால் நேரடியாகத் தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள். ஆகவே, அவர்கள், மறைமுகத் தேர்தல் வழி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் அமைப்பு நிர்ணயசபை உறுப்பினர்களாகிய 296 பேரைக் காட்டிலும் மிக அதிகமாக பிரதிநிதித்துவம் வாய்ந்தவ்ர்கள் ஆவர்' என்று மட்டுமே கூறமுடிந்தது." - ஆனால் அடிப்படை உரிமைகளில் கைவைக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இல்லை. கைவைத்தால், பாதிக்கப்பட்டவர், பாராளுமன்றத்தை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் வழக்கு தோடுக்கலாம் என்ற உச்ச நீதி மன்றத் தீர்ப்பு குறித்து மறுத்து ஒரு சொல்லும் சொல்லவில்லை. அடிப்படை உரிமைக்கும், பாராளுமன்ற உரிமைக்கும் மோதல் வரும்போது, அடிப்படை உரிமைக்கே முதல் இடம், அடிப்படை உரிமை பாதிக்கப்படும்போது, பாதிக்கப்பட்டது, பாராளுமன்ற சட்டமன்ற உரிமைகளால் என்றாலும், அம் மன்றங்களை எதிர்த்து, அடிப்படை உரிமை பாதிக்கப் பட்டவர் நீதி மன்றங்கள் செல்லலாம் என்ற உரிமை 1971 ஆம் ஆண்டு வரை மறுக்கப்படவில்லை. 1971-ல் பொதுத்தேர்தல் வந்தது. அரசியல் சட்டத்தை யும் திருத்துவதற்கு தேவைப்படும் பெரும்பான்மையோடு காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் பயனாய் தன் அரசியல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/120&oldid=888830" இலிருந்து மீள்விக்கப்பட்டது