பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 - வஞ்சி மூதூர் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்ள பல்வேறு திருத்த களை அரசியல் சட்டத்தில் கொண்டுவந்து நிறைவேற்றிற்று அவ்வாறு திருத்தப்பட்ட திருத்தங்களில் ஒன்றான 24-வது திருத்தம், அடிப்படை உரிமை உட்பட அரசியல் அமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதியையும் திருத்தும் உரிமையைப் பாராளுமன்றத்திற்கு அளித்தது: தன் உரிமையை நிலைநிறுத்திக்க்ொள்ள பாதிக்கப் பட்டவர் உச்சநீதி மன்றம் செல்லலாம் என்ற உரிமையை வழங்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 32 வது பிரிவு உட்பட உள்ள, அடிப்படை உரிமை பற்றிய பிரிவுகள்ையும் திருத்தும் உரிமையை பாராளுமன்றம் 24வது திருத்தம் மூலம் பெற்றுக்கொண்டிருக்கும்போது, ஓர் உறுப்பினர்க்கு, சட்டப் பேரவைக் கூட்டத்திற்கான அழைப்பாணை அனுப்பாமலே சட்டப்பேரவை கூட்டப்படுமாயின், இ வ் வ | று கூட்டப்பட்ட சட்டப் பேரவைக் கூட்டம் செல்லாது என நீதி மன்றம் செல்ல முடியுமா? செல்வதற்கு அரசியல் சட்டத்தில் வகையிருக்கிறதா என்பதற்கான விளக்கம் பின்னர் தரப்படும். - - W பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அவை நடவடிக்கையில் கூறிய சொற்கள், செயல்பாடுக்ள் குறித்து எந்த நீதி மன்றத்திற்கும் பதில் சொல்லத் தேவையில்லை. என, முறையே அரசியல் சட்டத்தின் 105, மற்றும் 194வது பிரிவுகள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவற்றின் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பும், பாராளுமன்ற, சட்டமன்ற நடைமுறைகளில் நிகழும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க எந்த நீதி மன்றத்திற்கும் அதிகாரம் இல்லை என அரசியல் சட்டத்தின் 122 மற்றும் 212வது பிரிவுகள் நீதி மன்றங்களுக்குத் தடையும் விதித் திருக்கும் நிலையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர்க்குச் சட்டமன்றக் கூட்ட அழைப் பானை அனுப்பாமல் கூட்டப்படும் சட்டமன்றக் கூட்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/121&oldid=888831" இலிருந்து மீள்விக்கப்பட்டது