பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 127 செல்லாது என்ற காரணத்தை முன் ைைத்து, நீதிமன்றம் செல்லும் உரிமை அந்த உறுப்பினர்க்கு உண்டா? அவர் வழக்கை ஏற்று விசாரிக்கும் உரிமை நீதி மன்றத்திற்கு. உண்டா என்ற கேள்வி, நியாயமான கேள்விய்ே. இந்தக் கேள்விக்கு விடைகாண, நாடாளுமன்ற, சட்ட மன்றங்களுக்கு அந்த உரிமையையும், நீதி மன்றங்களுக்கு அந்தத் தடையையும் விதிக்கும் சட்டப் பிரிவுகளில் ஆளப் பட்டிருக்கும் சில சொற்றொடர்கள், அச்சொற்றொடர் களுக்கான பொருள் விளக்கங்களைக் காண்பதும், ஓர் உறுப்பினர்க்குக் கூட்டத்திற்கான அழைப்பானை அனுப் பாதது அச்சொற்றொடர்கள் உணர்த்தும் பொருள் வளை யத்துக்குள் வருமா என்பதை ஆராய்வதும் இன்றியமையா தனவாம். - - பாராளுமன்றத்திற்கும், அதன் உறுப்பினர்களுக்கும், அதன் அதிகாரிகளுக்குமான அதிகாரம், உரிமை, சட்டப் பாதுகாப்பை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தின் 105 மற்றும் 105 (2) பிரிவுகளும், சட்டமன்றத்திற்கும், அதன் உறுப்பினர்களுக்கும், அதன் அதிகாரிகளுக்குமான அதிகாரம் உரிமை, சட்டப் பாதுகாப்பை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தின் 194 மற்றும் 194 (2) பிரிவுகளும் முறையே பாராளுமன்ற நடவடிக்கை முறைகளை, சட்டமன்ற நட வடிக்கை முறைகளை யொட்டி உறுப்பினர்களுக்குப் பேச்சுரிமை வழங்கப்மடுகிறது என்றும் பாராளுமன்றத் திலோ, சட்டமன்றக் குழுக்களிலோ, பேசிய பேச்சு, அளித்த வாக்குரிமை போலும் பாராளுமன்ற, சட்டமன்ற நடை முறைகள் குறித்து எந்த நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் அவர்கள் கட்டுப்பட்டுள்ளவர்கள் அல்லர் என்றுதான் கூறி யுள்ளன. - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/122&oldid=888836" இலிருந்து மீள்விக்கப்பட்டது