பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 24 . வஞ்சி முதுரர் ஒரு கூறாகிய பெண்ணைப் பழித்தல் போலும் செயல் களின் பால் வெறுப்புக் கொண்ட மக்கள், சமண சமயத்தின் பால் பண்டு காட்டிய ஆர்வத்தை மெல்ல மெல்லக் கை விடலாயினர். . - அந்நிலையில் சைவ சமயப் பெரியார்கள், சமணர் பின் பற்றிய அருள் நெறிகளாகிய, தண்ணீர்ப் பந்தல் வைத்தல், மடங்கள் அமைத்து கல்வி புகட்டுதல், அறப் பணிகள் ஆற்றுதல், வரும் அன்பர்களுக்கு விருந்தளித்து ஒம்புதல் போலும் செயல்களை மேற்கொண்டு, மக்களின் ஆதரவைப். பெறலாயினர். மக்கள் மனதை ஈர்க்கும் வகையில் கோயில் களில் ஆடல் பாடல்கள் இடம் பெற்றன: இனிய இசை யோடு கூடிய பாடல்கள் ஆலயங்களில் பாடப் பெற்றன. இவ் வகைகளால், சைவ சமயம் பல்லவர் காலத்தில் சிறப்பான இடம் பெற்று விட்டது. ப்ல்லவ மன்னர்களில் பலர் சைவராவர்; மகேந்திரவர்மன் தொடக்கத்தில் சமண ாைக இருந்து பின்னர்ச் சைவனாக மாறினான். சைவராகப் பிறந்த மருள்நீக்கியார், சமண சமயப் போதனையில் மயங்கிச் சமணரர்னார்: ,நல்லாறு தெரிந்துணர, நம்பர் அருளாமையினால் கொல்லாமை மறைந்துறையும் அமண் சமயம் குறுகினார்” பின்னர் உண்மை தெரிந்து மீண்டும். சைவரானார், சமணம் விடுத்துச் சைவராக மாறியது கண்டு. கொதித்தெழுந்த சமணர் சொல் கேட்டு, அவருக்கு இழைத்த கொடுமைகளை எல்லாம் சிவன் அருளால் அவர் கடந்தது கண்ட அளவே மகேந்திரவர்மனும், சைவ சமயத் தால் ஈர்க்கப்பட்டான் என்பர். உடனே சமணனாக இருந்த போது கட்டிய திருப்பாதிரிப் புலியூர் சமணப் பள்ளியை இடித்து திருவதிகையில் சிவன் கோயில் கட்டினான். "லிங்கத்தை வழிபடும் குணபரன் இந்த லிங்கத்தினால், புறச் சமயத்திலிருந்து திரும்பிய ஞானம் உலகத்தில் நீண்டநாள் நிலை நிற்பதாக” என்று திருச்சி மலைக் கோயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/22&oldid=888881" இலிருந்து மீள்விக்கப்பட்டது