பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 25 கவ்வெட்டுக் கூறுவது சைவ சமய வளர்ச்சியின் பெருமையை உணர்த்துகிறது. - நாவரசரும், ஞான சம்பந்தரும் தமிழகத்தின் கோவில்கள் தோறும் சென்று தேவாரப் பாடல்களைப் பாடிச் சைவ சமய வளர்ச்சியின் முழுமையைக் கண்டார்கள்; பரமேசுவரன், இராசசிம்மன், இரண்டாம் தந்திவர்மன் முதலியவர்கள் தமிழ்நாடு எங்கும் எண்ணிலாப் பல சிவன் கோயில்களைக் கட்டினார்கள். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த காஞ்சி கைலாயநாதர் கோயில் இராசசிம்மனால் கட்டப் பட்டதாகும். இவ்வாறு அன்பே சிவம் எனும் அடிப்படையாகக் கொண்ட சிவ வழிபாடு பெருகி வரும் அதே நிலையில் வட நாட்டினின்றும் போந்த, காபாலிக, பாசுபத, காளமுகச்' சைவ சமயங்களும் தமிழகத்கில் அங்கும் இங்குமாக இடம் பெற்றிருந்தன. நரசிம்மனின் படைத் தலைவராய், வாதாபியை வெற்றி கொண்ட பரஞ்சோதியார் என அழைக்கப்படும் சிறுத்தொண்டர் தம் மகனையே அறுத்துச் சமைத்த உணவை காபாலிக அடியார்க்குப் படைத்தமை உணர்க. - இவ்வாறு சமணத்தை அழித்துச் சைவத்தை வளர்த்த பணி, பல்லவ நாட்டில் மட்டுமல்லாமல் சோழ பாண்டிய நாடுகளிலும் நடைபெற்றது. சோழர் குலப் பாவையாகி, பாண்டியனை மணந்த பாண்டிமா தேவியாகிய மங்கையர்க் கரசியார் அழைப்பால் மதுரை வந்த திருஞான சம்பந்தர், பாண்டிய மன்னனுக்கு உண்டான வெப்ப நோயைத்: தேவாரம் பாடித் தீர்த்தும், சமணர்களை வாதிட்டு வென்றும் பாண்டிய மன்னனையும் ம்க்சுளையும் சைவ grr*&sortrri". . . . x * + & வட நாட்டிலிருந்து புதிய வேகத்தோடு வந்து தங்களை அழித்து விட்டுத் தமிழகத்தில் இடம் பெற்று விட்ட சமண, வஞ்-2 ; : - - - o -*.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/23&oldid=888883" இலிருந்து மீள்விக்கப்பட்டது