பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வஞ்சி மூதூர் பெளத்த சமயங்களைத் துரத்துவதே தங்களின் முதற்கடன் என எண்ணியதால் சைவமும் வைணவமும் தங்களுக்குள்ளே பகை கொள்ளாது, ஒன்றுபட்டே அப்பணியை ஆற்றின. இந்நிலை பல்லவர்களை அடுத்துத் தமிழகத்தில் பேரரசு நடாத்திய சோழர் காலத் தொடக்கத்திலும் தொடர்ந்து இருந்தது. சமணத்தை அழிக்க முனையும் தம்மைப் போலவே பெளத்தை அழிக்க முனையும் திருமங்கை ஆழ்வார்பால் அன்பு கொண்ட ஞானசம்பந்தர் அவரைத் தாம் பிறந்த சீர்காழிக்கு வருகை தருமாறு வேண்ட திருமால் கோயில் இல்லாத ஊருக்குப் போகாத தம் கொள்கையை ஆழ்வார் நினைவூட்டி அவர் அழைப்பை ஏற்க மறுக்க ஒருகாலத்தே 3ர்காழியில் கோயில் கொண்டிருந்த திருமால் பின்னர் கோயில் பாழுற்றுப் போனதால் கோயில் அர்ச்சகர் வீட்டில் இடம் பெற்றிருக்கும் உண்மையை சம்பந்தர் எடுத்துக் காட்ட சீர்காழி வந்து சம்பந்தரோடு சிலநாள் அளவளாவி மகிழ்ந்திருந்துத் திரும்பிய ஆழ்வார், திரும்புங்கால், அவ்வூர்ச் சிவன் கோயிலுக்குத் திருப்பணி ஆற்றிக் கொண் டிருக்கும் செல்வனை திருமால் கோயிலுக்கும் திருப்பணி ஆற்றுமாறு பணிக்க அவனும் அது செய்தான் எனத் திவ்விய சூரி சரிதம் என்ற வைணவ நூல் கூறும் வரலாற்று நிகழ்ச்சி அக்காலை நிலவிய சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக் காட்டாம். மேலும் சோழர்குலத் தெய்வமாகக் கருதப்பட்ட நடராசப் பெருமான் எழுந்தருளி இருக்கும் தில்லை கோயிலில் கோவிந்தராசப் பெருமாளும் எழுந்தருளி இருக்கும் காட்சியைக் கோவை பாடிய மணிவாசகர் போராட்டியுள்ளார். r - - சமண, பெளத்த சமயங்களை வென்று புத்துயிர் பெற்ற சைவம், பல்லவர் காலத்தை விடுத்துச் சோழர் காலத்தில் அடியிட்டதும் புகழ் ஏணியின் உச்சிக்கே சென்று விட்டது. முதலாம் ஆதித்த சோழன். காவிரியின் இரு கரையிலும், காவிரியின் தொடக்கம் முதல், அது கடலோடு கலக்கும்வரை எண்ணிலாச் சிவன் கோயில்களைக் கட்டி னான். M

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/24&oldid=888885" இலிருந்து மீள்விக்கப்பட்டது