பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவித்தனார் - 27 'இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலும், அவன் மகன் இராசேந்திரன், கட்டிய கங்கை கொண்ட சோழபுரக் கோயிலும், சோழப் பேரரசின் சம்யப் பணிக்குச் சிறந்த எடுத்துக் காட்டாம். மேலும், இராசராசன் காலத்தவரான நம்பியாண்டார் நம்பிகள், மூவர் தேவாரப் பாடல்களையெல்லாம் ஒன்று திரட்டித் திருமுறைகளாக வகுத்தார். தேவாரங்களைத் திருக்கோயில்களில் முறையாகப் பாடுவதற்கு வழி வகுக்கப் பட்டது; தேவாரம் பாடுவார்க்கும், அவருடன் மத்தளம் கொட்டுவார்க்கும், இசைக்கருவிகள் இயக்குவார்க்கும் நிவந்தங்கள் வைக்கப்பட்டன; தேவாரப் பாடல்களைப் பாடவும், பயிற்றுவிக்கவும், தேவார நாயகர் என்பான் தலைமையில் ஒர் அமைப்பே நிறுவப்பட்டது. கோயில்களில் வேதம் ஒத, வட நாட்டினின்றும் சர்வ சிவ பண்டிதம் என்பார், அவர் மாணவர்களுடன் வரவழைக்கப்பட்டார், சைவ சமயப் பெரியோர்களின் வரலாறு கூறும் பெரிய புராணத்தைச் சேக்கிழார் சோழர் காலத்தில்தான் ஆக்கி அருளினார். இவ்வாறு சைவ சமய வளர்ச்சி, ஆக்கபூர்வமாக ஒரு பால் வளர்ந்து கொண்டிருக்கும்போது, பிற சமய வெறுப்பும் மெல்லத் தலை தூக்கலாயிற்று. சமண, பெளத்த சமயங் களை அழிப்பதில் ஒன்றுபட்டுப் பணிபுரிந்த சைவமும், வைணமும், அவ்விரு சமயங்களும் அழிந்து விட்ட பின்னர்த் தம்மிடையே ஒற்றுமை குலைந்து ஒன்றையொன்று பகைத்துக் கொள்ளத் தொடங்கின; அந்நிலை சோழப் பேரரசின் பிற்காலத்தே ஏற்பட்டு லிட்டது. வைணவ ஆசாரியரான இராமானுசரும், அவருடைய மாணவர்களும், சோழ மன்னன் ஒருவனால் நாடு கடத்தப்பட்டனர். தில்லை நடராசர் கோயிலில் எழுந்தருளி இருந்த கோவிந்தராசப் பெருமானின் திருமேனியை இரண்டாம் குலோத்துங்கள் பறித்துக் கடலில் எறிந்து விட்டான். சைவக் கோயிலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/25&oldid=888887" இலிருந்து மீள்விக்கப்பட்டது