பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வஞ்சி மூதூர் பணிபுரிபவர்களும், வைணவக் கோயிலில் பணிபுரிபவர்களும் உறவு கொண்டாடக் கூடாது எனச் சட்டமே விதிக்கப் பட்டது. பள்ளிகளும், விகாரங்களும் அமைத்து, சமணர்களும், பெளத்தர்களும், அறப்பணி, அறிவுப்பணிகள் மூலம், மக்களைத் தம்பால் ஈர்த்ததைக் கண்ட சைவர்களும், தமிழக மெங்கும் மடங்களை நிறுவி, மக்களுக்குச் சமயக் கல்வி வழங்கியதோடு, ஏழை எளிய மக்களுக்கு, உணவும்" உடையும், உறையுளும், உடல் நோய் போக்கும் மருத்துவமும் அளித்துச் சமயப் பணிபுரிந்து வந்தன. க்டவுள் ஒருவர் உண்டு: உயிர் என்பது ஒன்று உண்டு; அவ் வுயிர் தன்னைத்தான் அறியவும், இறைவனை அடையவும் விடாமல் அதை தடுக்கும் இருள் ஒன்று உண்டு; அவை முறையே பதி, பசு, பாசம், எனப்படும் என்பதே சைவ சித்தாந்தமாகும்; இச் சைவ சித்தாந்த உண்மைகளை விளக்கும் உயர்ந்த நூல்களை ஆக்கி அருளிய பெருமை இம் மடங்களையே சாரும், சோழப் பேரரசின் . காலத்தில், கண்ட தைல் சமய நிலை, அவர்களுக்குப் ಟ್ವಿಸ್ತಿ; ஆட்சிப் பொறுப் பேற்றுக் கொண்டபாண்டியர் கர்ல்த்திலும், நாயக்கர் காலத்திலும் தொடர்ந்து இருந்து வந்தது. பாண்டிய மன்ஜர்த்ளும், நாயக்க மன்னர்களும், சிவனுக்குப் புதியகேர்யில்கள் கட்டுவது, பழைய கோயில்களைப் புதுப்பிப்பது, பண்டைய கோயில்களுக்கு முன்னோர் செய்து வைத்த அறக்கட்டளை களைப் பேணிக்காப்பது போலும் சமயப் பணிகளைக் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். மன்னர்களும், மக்களும், இவ்வாறு, சைவ சமய உணர்வில் ஆரiப்பந்து கொண்டு, விட்டமையினாலேயே, முகமதியப் படை யெடுப்பாலும், ஐரோப்பியர் வருகையாலும், அது தன்னிலை கெட்டு அழித்து விடாது. இன்றும் வளம் பெற்று வாழ்கிறது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/26&oldid=888889" இலிருந்து மீள்விக்கப்பட்டது