பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைணவ சமயம் காடு கொன்று நாடு கண்டு, ஆவும், ஆனிரையும் கொண்டு குடியோம்பும் வழக்கம் வந்த நிலையிலேயே, கடவுள், நி:ைவும் வர, இக்காடுறை மக்கள் தங்களைக் காக்கும் கடவுளாகத் திருமாலை மேற்கொண்ட நிகழ்ச்சி தொல்காப்பியர் காலத்திலேயே உருப்பெற்று விட்டது, "மாயோன் மேய காடுறை உலகும்” என்ற அவர் கூற்றும்; "முல்லை நிலத்துக் கோவலர், பல்ல பயன் தருதற்கு மாயோன், ஆகுதி பயக்கும் ஆபல காக்கவெனக் குரவை தழிஇ மடைபல கொடுத்தலின் அவன் ஆண்டு வெளிப் படும்” என்ற நச்சினார்க்கினியர் விளக்கமும் காண்க. இவ்வாறு, தொல்காப்பியர் காலத்துக்கு முந்திய தமிழர்களிடையே இடம் பெற்று விட்ட வைணவ வழி பாட்டு முறை கடைச்சங்க காலத் தமிழர்களிடையே சிறப்பிடம் பெற்றுக் திகழ்ந்தது. திருமால், மாயன், மாயவன், நெடியோன் என்ற பெயர்களால் குறிக்கப் பட்டுள்ளான். விஷ்ணு என்ற வடமொழிப் பெயரின் தமிழ் வடிவமாகிய விண்ணு, விண்டு என்பதும் ஒரிரு இடங்களில் இடம் பெற்றுள்ளன. திருமால், நீலமணி நிறமும், ஆழ்கடல் நீர் நிறமும் உடையவன்; அவன் கைகளில் சங்கும், சக்கரமும் ஏத்தி நிற்பான்; அவன் கொடி கருடன்: பாம்பின் மீது படுத்திருப் பான்; அவன் ஆயிரமாயிரம் கைகளும், ஆற்றலும் வாய்க்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/27&oldid=888892" இலிருந்து மீள்விக்கப்பட்டது