பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$0 வஞ்சி மூதுார் பெற்றவன். வேங்கடத்தில் அவனுடைய நின்ற கோலத்தை பும், ஆடகமாடக்த்தும், திருவரங்கத்தும் அவனுடைய அறிதுயில் கோலத்தையும் கண்டு வழிபட மக்கள் அவ்விடங் களுக்குச் சென்று வரும் வழக்கமும் அன்றே முகிழ்த்திருந்தது: அழகர்மலை, திருமால் குன்றம் என்று அன்று அழைக்கப் பட்டது. f - திருமால் அவதாரங்களாகிய இராமனையும், கிருஷ்ண னையும், அவர்கள் பற்றிய கதைகளையும் அக்கால மக்கள் அறிந்திருந்தனர். இராமன், இராவணனை வென்ற இராமாயணக் கதை மக்களிடையே பயின்றிருந்தது: இராமன் வேதம் ஒதாவாறு ஓயாது குரல் எழுப்பிய காக்கைகளைக் கரையாதிருக்க இராமன் பணித்தான் என்ற செய்தியும், இராவணன் துாக்கிச் செல்லும் போது, சீதை கழற்றி எறிந்த அணிகளைக் குரங்குகள் கண்டு எடுத்தன் என்ற செய்தியும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன; அது போலவே, கிருஷ்ணன், கண்ணன் என்ற பெயரில், சங்க இலக்கியங்களில் பல இடங்களில் குறிப்பிடப் பட்டுள்ளான்; குழல் இசைத்து ஆயர்குல மகளிருடன் ஆடிப் பாடி மகிழ்ந்த வரலாறும், ஆயர், குரவைக் கூத்தாடித் தன்னை மகிழ்விக்க அவர் துயர் தீர்ப்பான் என்ற நம்பிக்கையும் அக்கால மக்கள் அறிந்தனவாகும். நிலம் அளந்த வாமன அவதாரக் குறிப்பு, "அடியளத் தான் தாயது எல்லாம்” என்ற திருக்குறளில் இடம் பெற்றுள்ளது. சேரன் செங்குட்டுவன். ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்த திருமாலை வழிபடுபவன் என்பது: சிலப்பதிகாரத்தால் தெரிகிறது. கண்ணன், கண்ணனார் என்ற பெயர்கள். சங்ககால மக்கள் விரும்பி ஏற்றுக் கொண்ட பெயர்களாம் என்பது, அப்பெயர் தாங்கிய புலவர்கள் பலர் உண்மையால், புலனாம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/28&oldid=888894" இலிருந்து மீள்விக்கப்பட்டது