பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 31 கண்ணன் உடன்பிறந்த பலராமன் வாலியோன் என்ற பெயரால் கடைச்சங்க கால மக்கள் உள்ளத்தில் இடம் பெற்றிருந்தான்; அவன் மேனி வெண்ணிறம்: பாலும், வெண்சங்கும் அதற்கு உவமை காட்டப்படும்; அவன் படை உழு கலப்பை அவன் கோடி பனை, அவனுக்குக் கோயிலும் - இருந்தது! அது "வால் வளைமேனி வாலியோன் கோயில்* என அழைக்கப்பட்டது. திருமாலின் மகன் எனக் கருதப் பட்ட பிரமன், "முதியவன்’, ‘மாமுது முதல்வன்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளான். “படைத்தோன் மன்ற அப் பண்பிலாளன்' என, அவன் தொழில் மதிக்கவும் பெற்றுள்ளது. திருமாலின் மனைவி திருமகள் உடன் பிறந்தவள். மாலவர்க்கு இளங்கிளை எனப்படும் கொற்றவை: திருமால் மருகன், முருகன், இவ்வுறவு முறையினையும் தமிழர்கள் அறிந்திருந்தார்கள். திருமகள், திருமாலின் மார்பில் இடம் பெற்றவள் என்பது, திருமாலைத் *திருஅமர் மார்பன்' என அழைப்பதால் புலனாம், திருமகளின் தயக்கையாகிய மூதேவி, வறுமைக்கு உரியவன்; தவ்வை என அழைக்கப்பட்டவள், 'தவ்வையைக் காட்டி விடும்' என்ற குறள் காண்க. திருமகளை இருபுறமும் நின்று யானைகன் வழிபடும் காட்சி, கலித்தொகையுள் விளக்கப்பட்டுள்ளது. திருமகளுக்கு உரியதான இலககுமி என்ற பெயரும் அக்காலை ஆட்சியில் இருந்தது என்பது, மணிமேகலையின் முற்பிறவிப் பெயர் இலக்குமி என்பதாம் என மணிமேகலை குறிப்பிடுவதால் புலனாம். இவ்வாறு கடைச்சங்க காலத்தில் சிறப்போடு வாழ்த்த வைணவ சமயம்,கடைச்சங்க காலத்தை அடுத்துத், தமிழகம் புகுந்து, தமிழ் அரசுகளை அழித்து விட்டுத் தாதே ஆளத் தொடங்கிய களப்பிரர்கள், தம்மோடு கொண்டு வந்த பெளத்த, ச்மண சமயங்களால் அழிக்கப்பட்டு. வலி கள் மீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/29&oldid=888896" இலிருந்து மீள்விக்கப்பட்டது