பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 - வஞ்சி மூதுரர் விட்டது. இந்நிலை அக்களப்பிரர்களை வென்று பல்லவர் ஆட்சியை நிறுவிய சிம்ம விஷ்ணு காலம் வரை நீடித்தது. பல்லவர் பேரரசின் தொடக்கத்திலேயே வைணவம் மீண்டும் புத்துயிர் பெற்றுக் கிளர்ந்து எழுந்து விட்டது என்பதும், பல்லவ வேந்தர்கள் வைணவத்தைப் போற்றி வளர்த்தார்கள் என்பதும், களப்பிரர்களை அழித்தும் பல்லவப் பேரர்சுக்குக் கால்கோள் விழாக் கண்ட முதற் பல்லவன் பெயரே "சிம்ம விஷ்ணு' என அமைந்திருப்ப தாலும், உதயேந்திரப் பட்டயம், அவனைக் குறிப்பிடுங்கால்: 'பக்தி ஆராதித்த விஷ்ணு, சிம்ம விஷ்ணு' எனக் குறிப் பிடுவதாலும் நன்கு புலனாம். தங்களின் பிறப்பிடமாகிய வடநாட்டுல் தோன்றித் தங்களோடு உடன் வளர்த்துவை என்பதால், பெளத்த சமண சமயங்கள் பால் பல்லவர்க்குத் தொடக்கத்தில் பற்றும் பாசமும் இருந்தன என்றாலும், அவர்கள் தமிழகத்தில் நிலைத்து விட். பின்னர், அவர்கள் உள்ளம், சைவத்திற்கும் வைணவத்திற்கும் அடிமையாகி விட்டது. - } சைவ, வைணவ சமயங்களாகிய வைதீக சமயங்களின் வழிகாட்டியாக இருந்தவர்கள், மக்களிடையே பிறப்பு காரணமாக உயர்வு தாழ்வு கற்பித்துச் சமய வழிபாடு உயர்சாதியினர்க்கே உரித்து என்ற, மக்கள் ஒவ்வா வழி களைக் காட்டி வந்தனர். அதனால், அச்சமயங்கள், மக்கள் உள்ளத்தைப் பெரிய அளவில் கவரத் தவறி விட்டன; அந் நிலையில். தமிழகம் புகுந்த பெளத்த சமண சமயங்களின் தலைவர்கள் மக்களிடையே ஏற்றத் தாழ்வு கருதாமல், எல்லோரையும் ஒரு சேர மதித்து, நாடெங்கிலும் கல்வி நிலையங்கள்ை நிறுவி, மக்களுக்குக் கல்வி அறிவு புகட்டியும், மக்களுக்கும். ஆடு மாடு முதலாம் மாவினங்களுக்கும் தனித் தனியே மருத்துவமனைகள் நிறுவி, நோய் போக்கியும், அறச்சாலை பல அமைத்து, கூன், குருடு, செவிடு, முடங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/30&oldid=888900" இலிருந்து மீள்விக்கப்பட்டது