பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - வஞ்சி முதுரர் ஞானசம்பந்தர், மணிவாசகர் ஆகிய முவர் பெரிய அளவில் மேற்கொண்டார்கள். என்றாலும், அப்பணியில், வைணவர் களுக்கும் பங்கில்லாமல் போகவில்லை. திருமங்கை ஆழ்வார், தாகப்பட்டினத்துப் பெளத்த விகாரத்தில் இருந்த பொன்னால் செய்யப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து, அதைக் கொண்டு, பல கோயில் திருப்பணிகள் செய்தார்இஎன்று குருபரம்பரை கூறுகிறது. மேலும், "வெறுப்போடு சமணமுண்டரி விதியில் சாக்கியர்கள் - நின்பால் பொறுப்பரியண்கள் பேசில் போவதே நோயதாகி குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல், தலையை ஆங்கே அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமாநகர் உளானே’’ என்ற கொண்டரடிப்பொடி ஆவ்வார் திருப்பாடல்' வைணவப் பெரியார்கள், பெளத்த சமணர்கள் பால் கொண் டிருந்த வெறுப்புணர்ச்சியை விளக்குவதாகும். . சமணனாக இருந்த மகேந்திரவர்மன் மாறியது சைவத் திற்கே என்றாலும், அவனுக்குப் பின் வந்த பல்லவர் பலரும் வைணவர்களாகவும் இருந்துள்ளார்கள். காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோயில், பரமேசுவர விண்ணகரத்துக் கோயில் , நாமக்கல் மலையடியில் உள்ள குகைக் கோயில் போலும் பல கோயில்கள், பல்லவ வேந்தர்கள் கட்டிய வைணவக் கோயில் களாகும். வைணவ அடியார்களாகிய ஆழ்வார்கள். தமிழகத் தில் உள்ள் வைணவக் கோயில்களுக்குச் சென்று, இனிய தமிழ்ப் பாக்கள் பாடி வைணவ சமயம் வளரப் பெருந் தொண்டு ஆற்றினார்கள். - தமிழகத்துள் நுழைந்துவிட்ட பெளத்த சமண சமயம் களை அழிப்பதே மக்களின் தலையாய கடமை என்றஉணர்வு: த்ளிர்விற்றிருந்த காலமாதலின், வைணவர்களும் சைவர் களும் தம்முள் பகைத்துக்கொள்ள முடியாது, புறச்சமயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/32&oldid=888903" இலிருந்து மீள்விக்கப்பட்டது