பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் . 35 ஒழிப்புப் பணியில் ஒன்றுபட்டே நின்றனர். சமணரை. மதுரையில் வாதித்து வென்று சைவப் பயிர் தழைக்கப் பணி புரிந்து வரும் திருஞானசம்பந்தர், வைணவப் பெரியாராகிய திருமங்கை ஆழ்வாரைத் தாம் பிறந்த சீர்காழிக்கு வருகை தருமாறு வேண்ட, திருமாலுக்குக்கோயில் இல்லா ஊருக்குப் போகாத் தம் சமயக் கொள்கையைக் காட்டி, அவர் மறுக்க சம்பந்தர் சீர்காழியில் இடம்பெற்றிருந்த திருமால் கோயில் பேணுவார் அற்றுப்போனமையால், அங்கிருந்த திருமாலைத் தனியார் ஒருவர் போற்றி வருகின்றார் என்ற உண்மையை உணர்த்தவே, சீர்காழிக்கு வந்த திருமங்கை ஆழ்வார். திரும்புங்கால் அங்குள்ள சிவன் கோயிலுக்குத் திருப்பணி ஆற்றிவரும் ஒரு செல்வரை திருமால் கோயில் திருப்பணியை யும் ஆற்றுமாறு பணித்து அவர் இசைவு பெற்றுத் திரும் பினார் எனக் கூறும் திவ்வியசூரி சரிதம் என்ற வைணவ நூல் குறிப்பு, சைவ வைணவர்களின் சமயங்களிடையே, அக் காலை நிலவிய ஒருமைப்பாட்டிற்கு ஒர் எடுத்துக்காட்டாம்: வைணவ சைவ சமயங்களுக்கிடையே நிலவிய இவ் வொற்றுமை நீண்ட நாட்கள் நிலைபெற்றிருக்கவில்லை; தங்கள் பொதுப்பகையாகிய பெளத்த-சமண சமயங்கள் வீழ்ச்சி உற்ற பின்னர், வைணவர்களும் சைவர்களும் தத்தம் சமய வளர்ச்சியில் கந்த் துான்றலாயினார்; அதனால் அவர் களிடையே பகையுணர்ச்சி வளர்ந்தது; வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் இடையில் பற்பல இடங்களில் பூசல்கள் ஏற்பட்டன; வைணவக் கோயில் அர்ச்சகர்களோடு உறவு. கொண்டிருந்தனர் என்பதற்காக, சிவன் கோயில் அர்ச்சகர் தண்டிக்கப்பட்ட நிகழ்ச்சியும் அக்காலை நடைபெற். றுள்ளது. - - சோழர் ஆட்சிக் காலத்தில், இராமானுசர் நாடு கடத்தப்பட்டார்: தில்லைப் பெரிய கோயில் திருப்பணி மேற்கொண்ட இரண்டாம் குலோத்துங்கன், அக்கோயிலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/33&oldid=888905" இலிருந்து மீள்விக்கப்பட்டது