பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வஞ்சி முதுரர் எழுந்தருளி இருந்த, கோவிந்தராசப் பெருமாள் விக்கரகத் தைப் பெயர்த்துக்கொண்டு போய் கடலில் எறிந்து இவை போலும் எதிர்ப்புகளையுப் தாங்கிக்கொண்டு வைணவ சமயம், தமிழகத்தில் வளமார்வாழ் பெற்று வந்தது; வைணவர் சைவத்தோடு போராடியதோடு நில்லாமல், தம் சமயத்திற்கு உள்ளாகவே எழுந்த போராட்டத்தையும் தாங்கவேண்டியதாயிற்று; வைணவ சமயத்தின் இரு பிரிவுகளாகிய வடகலை, தென்கலைகளுக் கிடையே என்றோ துவங்கிய போராட்டம், இவ்விருபதாம் நூற்றாண்டிலும் ஒய்ந்திலது! உயர்நீதிமன்றங்களில், அவ் வழக்கு இன்றும் இருந்து வருகிறது: என்றாலும், சங்ககாலத் தில் அது பெற்றிருந்த வளத்தில், சிறிதும் குன்றாத வகை யில் அது, தமிழகத்தில் இன்றும் இடம்பெற்று நிற்கிறது. சீவகசிந்தாமணியும், பெரிய புராணமும் சமண சைவ இலக்கியங்களாக அவ்வச்சிமய வளர்ச்சிக்குத் துணை புரியக் கண்ட வைணவர்களும் கம்பராமாயணம், வில்லிபாரதம், பாகவதம் போலும் தீந்தமிழ் இலக்கியங்களை உருவாக்கி வைணவ சமய வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்துள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/34&oldid=888907" இலிருந்து மீள்விக்கப்பட்டது