பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சமண சமயம் மெளரியப் பேரரசனாகிய சந்திரகுப்தனோடு வந்த சமண முனிவராகிய பத்திரபாபு என்பவர், வடநாட்டில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்திலிருந்து உயிர் பிழைத்து வாழ் வான் வேண்டி, பல்லாயிரவரை உடன் கொண்டு சரவண பெல்கோலாவில் தங்கினார் எனச் செவி வழிச் செய்தி கூறு கிறது. இச்செய்திக்கு வரலாற்றுச் சான்று உண்டா என்பது ஐயப் பாடாகவே உளது, எனினும், தமிழகத்தின் பல்லிடங்களிலும் காணப்படும் பிராமி எழுத்துக் கல் வெட்டுக்கள், சமண சமயம், தமிழகத்துள், கி.பி. இரண் டாம் நூற்றாண்டிற்கு முன்பே நுழைந்து விட்டது என்பதை உறுதி செய்ய வல்லவாம். . . "உலோச்” என்பது, சமண சமய வழிபாட்டு நிலைகளுன் ஒன்று. அப்பெயர் தாங்கிய "உலோச்சனார்' என்ற புலவர் ஒருவர் கடைச்சங்க இலக்கியப் புலவர் வரிசையில் இடம் பற்றுள்ளார். அவர் இயற்றிய பாக்கள், அகநானூறு புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன. ஆகவே, கடைச் சங்க காலத்திலேயே, சமண சமயம் மக்கள் உள்ளத்தில் ஆழவேர் ஊன்றி விட்டது என்பது தெளிவாயிற்று. - சைவ, வைணவ சமயங்களாகிய வைதீக சமயங்கள், மக்களிடையே பிறப்பு காரணமான உயர்வு தாழ்வு கற். பித்தும், ஆண்டவனை வழிபடவும், அவன் அருள் பெற்வும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/35&oldid=888910" இலிருந்து மீள்விக்கப்பட்டது