பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

as - - வஞ்சி முதுரர் உயர் சாதியினர்க்கே உரிமை உண்டு; கற்கும் உரிமையும் அவரதே என்பன போலும் ஏலா மொழிகளைக் கூறியும் வந்த நிலையில், தமிழகம் புகுந்த சமணர்கள், ஏழை எளிய மக்களுக்குக் கல்வி அறிவூட்டப் பள்ளிகளை நிறுவியும், அவர் உடற் பிணி போக்க மருத்துவ நிலையங்களைத் திறந்தும், பசிப்பார்க்கு உணவு படைக்க அறச்சாலைகளை அமைத்தும் தொண்டாற்றத் தொடங்கவே, மக்கள் உள்ளம் வைதீக சமயங்களை மறந்து, சமண சமயத்தின் பால் சென்றுவிட்டது. மேலும், கடைச்சங்க காலத்தை அடுத்துத் தமிழகத்துள் புகுந்து, தமிழரசுகளை அழித்துத் தம் ஆட்சியை நிறுவிய களப்பிரர்களும், அவர்களை அடுத்துத் தமிழ்நாடு ஆண்ட பல்லவர்களும் வட நாட்டவராக, அவர் கள் இயல்பாகவே சமண சமயத்தவர்களாகவும், அதன் வளர்ச்சியில் ஆர்வம் உடையவரர்கவும் ஆகிவிடவே, சமண சமயம், அக்காலை செல்வாக்கு பெற்றுவிட்டது. கடைச் சங்க காலத்தில் காவிரிப்பூம் பட்டினம், சமண சமயத்தின் செல்வாக்கு மிக்க இடமாகத் திகழ்ந்தது. எண்ணற்ற சமணர்கள் ஆங்கு வாழ்ந்திருந்தார்கள். அவர் கள் வாழ்விடம், சமணப் பள்ளி அல்லது அமணப்பள்ளி என அழைக்கப்பட்டது. அவர்களுடைய வழிபாட்டிடம், அருகத் தானம் எனப்பட்டது. கந்தப்பள்ளி என்றும், நிக்கந்தக் கோட்டம் என்றும் அழைக்கப் பெற்ற சமணக் கோயில் ஒன்றும்; காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்தது. asmrr ஊராகச் சென்று சமண சமயத்தைப் பரப்பி வரும் பணியை மேற்கொண்டவர்கள் "சாரணர்' என்றும், சமணத் துறவிகள் 'சாவகர்” என்றும், உடல் வருத்தித் தவம் ஆற்றும் துறவிகள் "சாவக ரீேன்பிகள்” என்றும் அழைக்கப் பெற்றனர். கண்ணகிக்கும் கோவலனுக்கும் துணையாகக காவா பூம்பட்டினத்திலிருந்து மதுரை வரை உடன் வந்த கெளத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/36&oldid=888912" இலிருந்து மீள்விக்கப்பட்டது