பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் r 39 அடிகள் ஒரு சமணத் துறவுயாவர் ! போகும் வழியில், எதிர்ப் பட்ட சாரணர்களும் பிறரும், மதுரையில் இடைக்குல மடந்தை மாதரியும் அவரிடம் காட்டிய அன்பும் அடக்கமும், சமணப் பெரியார்களுக்கு, அக்காலை இருந்த செல்வாக்கை உணர்த்துவனவாம். கோவலனும் ஒரு சாவக நோன்பி என்று கூறினாள் கண்ணகி. கூறிய இவற்றால், கடைச்சங்க காலத்திலும், அதை அடுத்த காலங்களிலும், சமண சமயம், தமிழகத்தில் பெற்றிருந்த செல்வாக்கினை ஒருவாறு உணரலாம், கி. பி 470ல் வஜ்ஜிர நந்தி என்பவர் திராவிட சங்கம் என்ற பெயரால் ஒரு சமண சங்கத்தை நிறுவினார். அத் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த தமிழ் அறிந்த சமணரி கள், எண்ணற்ற தமிழ் நூல்களை ஆக்கித் தமிழை வளப் படுத்தினார்கள். - சமண சமயம் பெற்றிருந்த இச்செல்வாக்கு பல்லவt காலந் தொடக்கத்திலேயே அழிந்து விட்டது: சமணர்கன், தந்திகணம், சேனாகனம், சிம்ம கணம், தேவ கணம் எனத் தமக்குள்ளாகவே பிரிவினை வளர்த்துக் கொண்டார்கள். அவர்கள் ஒழுகலாற்றிலும் குறை நேர்ந்துவிட்டது; அறவுள்ளம் அழிந்து மறவுள்ளம்உடையவர்களாகிவிட்டனர் இதனால், மக்களுக்கு அவர் பால் வெறுப்பு வளரத் தலைப் பட்டது; அந்நிலையில், சைவர்களும், வைணவர்களும் தங்கள் சமயங்களை, ஏழை எளிய மக்களும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் எளிமையுடையதாக ஆக்கிக் கொண்டனர்; இதனால், சைவமும், வைணவமும் மக்களி டையே செல்வாக்கு பெற்றன. இந்த வெறுப்புணர்ச்சியின் தலையாய கட்டமே, அப்பர் சமணம் விடுத்து மீண்டும் சைவர் ஆனது. அவரைப் பின் தொடர்ந்து எண்ணற்றவர் சமணம் விடுத்து சைவர் ஆயினர்.அது பொறாத சமணர்,அக்காலை அரசனாகஇருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/37&oldid=888914" இலிருந்து மீள்விக்கப்பட்டது