பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 & வஞ்சி மூதுரர் மகேந்திரவர்மன் சமனனாக இருந்ததைப் பயன் கொண்டு, அப்பருக்குத் துன்பங்கள் பல தந்தனர்; நீற்றறையில் விட்டனர்; நஞ்சு ஊட்டினர்; கொல்யானைக் காலில் இட்டு மிதிக்கச் செய்தனர்; இறுதியாகக் கல்லோடு கட்டிக் கடலில் போட்டனர். அவ்வளவு கொடுமைகளையும் தயங்காது தாங்கிக் கொண்டு, சைவராகத் திகழ்ந்தார் அப்பர்; அது கண்டு அரசனும், மனம் மாறிச் சமணம் விடுத்துச் சைவனானான். - பல்லவ நாட்டில் இம்மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் அதே சமயம், பாண்டி நாட்டில் மன்னன் சமணனாக இருப்பது பொறுக்காத அவன் மனைவி மங்கையர்க்கரசியார் திருஞான சம்பந்தரை அழைக்க, அவர் சமணரால் தீர்க்க இயலாத மன்னன் நோயைத் தீர்த்து மன்னரைச் சைவனாக் கினார்: சமணர்களை வாதிட்டு வென்றார்; தோற்ற சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டனர். இவ்வாறு கி.பி, ஏழாம் நூற்றாண்டின் இடைக் காலத்திலேயே, சமணம் இத்தகைய பேரழிவிற்கு உள்ளாகி விட்டது. - இவ்வாறு பல்லவ நாட்டிலும், பாண்டி நாட்டிலும், அரசர்களின் வெறுப்புக்கே உள்ளாகி அழிவை ஏற்றுக் கொண்ட சமண சமயம், பெளத்த சமயம் போல், அறவே அழிந்து விடவில்லை. விஜயாலய சோழர் வழிவந்த சோழர் பேரரசு நடத்தியகாலத்தில், அது தமிழகத்தின் பல இடங் களிலும் செல்வாக்கோடு இருந்து வந்தது என்பதை, அக் காலக் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. சிவன் கோயில் களுக்கும், வைண்வக் கோயில்களுக்கும், இறை நீக்கி நில தானம் அளிப்பது போலவே, சமணக் கோயில்களுக்கும் நிலம் விடப்பட்டது. அத்தகைய நிலங்கள் 'பள்ளிச் சந்தம்' என அழைக்கப்பட்டன. திருச்சிராப்பள்ளிக்கு அருகில், திருமலவாடி எனும் ஊரில் குந்தவை பிராட்டியார் ஒரு சமணக் கோயிலைக் கட்டியுள்ளார்கள். குலோத்துங்கன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/38&oldid=888915" இலிருந்து மீள்விக்கப்பட்டது