பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - - 41 பெரும் பள்ளி என்ற சமணக் கோயிலுக்கு முதலாம் குலோத்துங்கன் இறையிலி நிலம் வழங்கியுள்ளான். வெடால் விளாப்பாக்கம் ஆசிய இடங்களில் அமைந்திருத்த சமணப் பள்ளிகளைப் பற்றிய குறிப்பும் கல்வெட்டில் காணப் படுகிறது. காஞ்சி மாநகரின் ஒரு பகுதியாக திருப்பருத்திக் குன்றம் என்ற பெயரோடு இன்றும் இருக்கும்பகுதி, சமணர் களின் வாழிடமாகப் பண்டு திகழ்ந்திருந்தது; இன்று ஜீன காஞ்சி என அழைக்கப்படும் அப்பகுதியில், இன்றும் சமண சமயத்தவர் வாழ்ந்து வருகின்றனர். . . சமணர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய பணி எண்ணிக் - கூற இயலாப் பெருமை வாய்ந்ததாகும். சேக்கிழார் பெருமானனப் பெரிய புராணம் பாடத் துாண்டு மாறு பண்ணிய பெருமை, சமண முனிவராம் திருத்தக்கதேவர் இயற்றிய சீவக சிந்தாமணியாகும். - அவிநயம், செயிற்றியம், காக்கை பாடினியம் யாப் பகுங்கலம், யாப்ப்ருங்கலக்காரிகை, நேமிநாதம் நன்னூல், முதலாம் இலக்கண நூல்களையும், சூளாமணி, உதயணன் பெருங்கதை, கலிங்கத்துப் பரணி, யசோதர காவியம் முதலாம் இலக்கிய நூல்களையும், நாலடியாt போலும், அறவொழுக்க நூல்களையும் அளித்தவர்கள் சமணப் பெரியார்களே ஆவர்: தொல்காப்பியத்துக்கு முதல் உரை கண்ட இளம்பூரணர், சிலப்பதிகாரத்துக்கு உரை கண்ட அடியார்க்கு நல்லார், நன்னூலுக்கு உரை கண்ட மயிலை நாதர் போலும்உரையாசிரியர்களையும் சமணமே தமிழுக்கு. அளித்த ள்ளனது. •.

இளஞ்சிறார்கள், கணக்கியல் துறையில் சிறந்து, விளங்கத் துணைபுரியும் நெல்லிலக்க வாய்பாடு, சிறுகுழி வாய்பாடு, கீழ்வாய் இலக்கம், பெருக்கல் வாய்பாடு முதலாம். சிறு நூல்களை வழங்கிய பெருமையும் சமணரையே சாரும்.

வஞ்-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/39&oldid=888917" இலிருந்து மீள்விக்கப்பட்டது