பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பெளத்த சமயம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வடநாடு ஆண்ட, மெளரியப் பேரரசனான அசோகனுடைய பாறைக் கல்வெட் டுக்கள், தமிழ்நாட்டில், மக்களுக்கும், கால்நடைகளுக்கும் தனித்தனியே மருத்துவமனைகளை அமைத்து நோய்ப் போக்கும் பணிகளையும், பெளத்த மதப் பெரியார்களைத் து.ாதுவர்களாக அனுப்பி, பெளத்த மதம் பரப்பும் பணிகளை யும் அசோகன் மேற்கொண்டான் எனக் கூறுகின்றன. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்து, இந்தியாவின் பல்வேறு பாகங்களையும் சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பிய சீன வழிப்போக்கனாகிய யுவான்சுவாங் என்பவன், தன்னுடைய பயணக் குறிப்பில், காஞ்சிபுரத்தில் அசோகன் நாட்டிய துரண் இருந்ததையும், மதுரைக்கு அருகில், அசோகன் தம்பியாகிய மகேந்திரன் கட்டிய பெளத்த விகாரை இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார். பெளத்த விக்குகளின் பரம்பரையைக் கூறும் பர்மா நாட்டு வரலாற்று நூல் ஒன்று, காஞ்சிபுரத்தில் அசோகன் கட்டிய விகாரையில் தர்மபாலர் என்ற பெளத்த பிக்கு வாழ்ந்து வந்தார் எனக் கூறுகிறது. மேற்கூறிய இச்சான்று களால், கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே, பெளத்த 3. தமிழகத்துள் நுழைந்துவிட்டது என்பது தெளிவா ർഗും

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/40&oldid=888921" இலிருந்து மீள்விக்கப்பட்டது