பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 வஞ்சி முதுரர் இச்சொல் அம்மனிதனுக்குக் கவலையைக் கொடுத்தது. அந்நேரத்தில் இன்னொரு பட்டியலை எடுத்தார் தேவதூதர். - "அது என்ன” என்று கேட்டான் அம்மனிதன். 'இதுவா! இந்தப் பட்டியலில்தான் கடவுள் தன் அன்பர் களின் பெயர்களை எழுதிவைத்துள்ளார்” என்றார் தேவதூதர். "அதிலாவது என் பெயர் இருக்கிறதா என்று பாருங் கள் என்று பரிந்து தேவது.ாதனைக் கேட்டான், கடமை களைத் தவறாது செய்து வரும் அம்மனிதன். - பட்டியலைப் பிரித்து தேவதூதன், உடனே 'உன் பெயர் தானே முதலாவதாக இருக்கின்றது” என்றார். -கருத்துப் பொதிந்த இத்த ஆங்கிலக் கவிதை எதனைக் குறிக்கின்றது? - - கடமைகளைச் சரிவரச் செய்பவனிடத்தில்தான் கடவுள் இருக்கின்றார் என்பதைத் தான் இது வெளிப்படுத்துகின்றது. இதை வள்ளுவரும், "மடியுளாள் மாமூகடி என்ப. மடியிலான் தாளுளாள் தாமரையினாள்' என்ற குறளில் வினக்கியுள்ளார். பாடங்களை சரிவர ஒழுங்காகப் படிக்காது, "என்னைச் சோதனையில் சித்தி யெய்தவை நான் உனக்குத் தேங்காய் உடைப்பேன். சூடம் கொளுத்துவேன்' என்று கோயில் முன் நின்று கும்பிட்டால் சோதனையில் சித்தி எய்தி விட முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/92&oldid=889036" இலிருந்து மீள்விக்கப்பட்டது