பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 97 - இலட்சுமி படத்தை வீட்டில் வைத்து தினமும் வணங்கி "என்னைச் செல்வன் ஆக்கிவிடு' என்று துதித்தால் செல் வனாகி விட முடியுமா? கடமையைச் சோம்பலின்றி செய்பவனிடத்தில் செல்வம் தானாக வந்து சேர்கின்றது என்று வள்ளுவர் இக்குறளில் விளக்கியுள்ளார். - வள்ளுவர் கடமையைச் சரிவரச் செய்தார். இன்று அவரை நாம் நிறை குடம் வைத்து சூடம் கொளுத்தி கடவுளை வனங்குவது போல் துதிக்கின்றோம். பேரறிஞர் அண்ணாவும் தமது கடமைகளை நாட்டுக்கு [. மொழிக்குக் குறைவின்றிச் செய்தார். இன்று அனைத்துப் பிரிவு மக்களும் அவரைப் போற்றி வணங்குகின்றனர். இதையே வள்ளுவரும், “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்று சொல்வியுள்ளார் தினபதி நாளிதழ், கொழும்பு 13- 9- 1969

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/93&oldid=889038" இலிருந்து மீள்விக்கப்பட்டது