பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. புலி நிகர் மாந்தர் "வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர்' என்று கூறுவர் வள்ளுவர். உலகிற் பிறந்தாருள் உயர் புகழ் பெற்று வாழ்ந்தாரே உண்மையிற் பிறந்து வாழ்ந் தார் எனப் போற்றப்படுவர். ஆனால், அப்புகழ் பெற்று. வாழ்ந்தாரோ உலகில் மிகச் சிலராவர்! உலகிற் பிறந்தார் பெருந்தொகையினராவர்: அவர் தொகையினை எண்ணிக் காணல் இயலாது; அவர்கள் புகழ் பெற்று வாழாமையால் அவரைப் பிறந்தாராகவே பேணார் பெரியோர்: கணங் கணம் தோன்றிக் கணங் கணம் மறையும் பல்பிணங்களாம் அவை என்றே பழிப்பர்: ஆதலில், உலகிற் தோன்றுவார் புகழோடு தோன்றுதல் வேண்டும்; ஆனால், அப்புகழ் எளிதில் எய்துவதன்று. உயர்குடிப் பிறப்போ, நிறை பெருஞ் செல்வமோ புகழ் அளிப்பன ஆகா: புகழ் பெறுதற்காம் பெருங்குணம் அமையப் பெறல் வேண்டும். அது அமையப் பெற்று புகழ் பெற்றார். இம்மையிலும், மறுமையிலும் மாறாப் பெரு. நிலையுற்றுப் பெருக வாழ்வர். ஆதலின், உலகிற் பிறந்தார் ஒவ்வொருவரும் உயர் பெரும் புகழ் பெற்றுப் பிறர் போற்ற வாழ்தல் வேண்டும். தாம் பிறந்ததும், இறந்ததும் பிறர் எவரும் அறியாவாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/94&oldid=889040" இலிருந்து மீள்விக்கப்பட்டது