பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 99 மாண்பிலராகி மறைந்த வாழ்வினராதலின், வாழாமையே. நன்று: "தோன்றின் புகழொடு தோன்றுக! அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று' உழவர் உழுது பயிர் செய்தாராக, விளைந்து முற்றி வளைந்த கதிர்களை அவ்வுழவர் அறியா வண்ணம் சிறுகச் சிறுக, கொண்டுச் சென்றுத்தேன் வளையினுள்ளே சேர்த்து வைக்கும் இயல்புடையது எலி, தன் பெரும் பசியைப் போக்கிக் கொள்ள வேண்டி கொழுத்த பன்றியொன்ற அடித்தக்கால், அது தனக்கு இடப்பக்கத்தே வீழ்ந்ததனை உண்ணாத தன் உறுதியே முன் நிற்க, அதை உண்ணாது விட்டுச் சென்று, மறுநாள் முழையினின்றும் வெளிப்போந்து பெரிய ஆண் யானையொன்றை அடித்து வவப்பக்கத்தே வீழ்த்தி தன் பசியாறும் பண்புடையது புலி. எலியொத்த இழிவுள்ளம் உற்றாரும், புலி நிகர் பேருள்ளம் பெற்றாருமாய் இருவகையினர், மக்களிலும் வாழக் காண்கிறோம், எலியொத்தவர் தம் தோள்வலி கொண்டு உழைத்துப் பெறாது, பிறர் உழைத்துச் சேர்த்த பொருளை, அவர் அறியா வண்ணம் சிறிது சிறிதாகக் கைப் பற்றி, அதையும் ஆர உண்டு மகிழாமல், உண்ணாதே. - சேர்த்து வைக்கும் சிறுசெயலினராவர். புவி நிகர் மாந்தர், சன்றாள் பசிகாண்பா ராயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை' - என்ற உயர் நோக்குடையராய்த், தம் புகழ் கெடவரும். செல்வம், பெருஞ் செல்வமேயாயினும், அதைப் பொரு ளென மதியாப் பேருள்ளம் உடையவராவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/95&oldid=889042" இலிருந்து மீள்விக்கப்பட்டது