பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 - வஞ்சி மூதூர் இவ்விரு வகை மக்களுள், முந்தையோர் உள்ள உயர்வு அற்றவர்; அத்தகையார் பெரும் பொருளினராயினும் அவருடன் நட்பு கொள்வதை அறிவுடையோர் விரும்பார்: விரும்புதல் கூடாது. "பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை” என்பவாகலின், பின்னையோர் நட்பினையே சான்றோர் பெரிதும் பேணி வரவேற்பர். - வாணிகத் தொழிலின் வளம், வணிகர் தம் நல்லொழுக் கத்தை அடிப்படையார்க் கொண்டது. அவர் தம் வரு வாயே குறியாய்த் தம் வணிகப் பொருளின் வளத்தினைக் கருதாராயின் வாணிகம் வீழ்ந்துபோம்; அவ்வாறன்றித் தம் வருவாயினும், வாணிகப் பொருள்களின் நேர்மையே பெரிது எனப்பேணும் அறிவினராயின், அவர்கள் வர்ணிகம் வளரும், இந்நுட்த்தை அறிந்தவர் சங்க காலத் தமிழ் நாட்டு வணிகர். அவர்கள் நீதி தவறா நெஞ்சுடையவர்: தமக்கும் தம் தொழிலுக்கும் உண்டாம் பழிகண்டு அஞ்சும் பண்புடை யவர்: என்றும் வாய்மையே வழங்கும் வாழ்வுடையவர். தம் பொருள் போன்றே பிறர் பொருளையும் பேணும் பேரறம் படைத்தவர். கொள்ளும் சரக்கைத் தாம் கொடுக்கும் பொருட்கு மிகையாகக் கொள்ளார்; தாம் கொடுக்கும் சரக்கைத் தாம் வாங்கும் பொருட்குக் குறைத்துக் கொள் ளார். இத்தகைய வாணிக நெறியால் வந்த வளத்தால் அவ்வணிகர் சிறந்தார். r . . செல்வம் உடையார் பால் கல்வி நில்லாமையும், கவ்வி உடையார் பால் செல்வம் நில்லாமையும் உலகில் இயல்பாகி விட்டது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/96&oldid=889044" இலிருந்து மீள்விக்கப்பட்டது