பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - - 101 "இரு வேறு உலகத்து இயற்கைத் திருவேறு தெள்ளிய ராதலும் வேறு." என்ற குறள் மொழி காண்க. இந்நிலை உலகில் வாழும் எவர்க்கும் நன்மை விளைவிப் பதாகாது; மக்களிடையே பணம் வளருகின்ற அளவு, மனமும் வளர்தல் வேண்டும். மனம் வளர்தலின்றித் தான் மட்டும் வளர்ந்த பணம் பாழ் பல செய்யும் இன்றைய உலகின் நிலை இதுதான். - செல்வம் நில்லா இயல்பினை உடையது. நில்லாத செல்வத்தை நிலையுடைத்து என்று உணர்தல் புல்லறிவு, அப்புல்லறிவால், அதைப் பெருகப்பிடித்துப் பேணி வைத்தல் பெருங்கேடாம். எங்கும் நில்லாது இயங்கிக் கொண்டே இருக்கும் இயல்புடைய செல்வத்தைச் சேர்த்துப் பிணித்து. வைப்பதால் உலகில் கேடுறுவார், அதை பெற மாட்டாப் பல்கோடி மக்கள் மட்டும் அன்று; அதைப் பேணி வைத் திருக்கும் தனக்கும் கேடாம். "ஆழ அமுக்கி முகத்தினும் நாழி முகவாது நானாழி" என்ப பெரும் பொருளைச் சேர்த்து வைத்தார், அச்செல்வத் தாலாய முழுப் பயனையும் பெற்று விடுவர் எது எண்ணுவது இயலாது; செல்வம் குறைந்துவிடுமே என்ற அச்சம் அவரை அனுபவிக்க விடாது. நுகர விரும்பிய வழி இடையூறுகள் பல வந்து சேரும். - "வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது" என்பர் வள்ளுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/97&oldid=889046" இலிருந்து மீள்விக்கப்பட்டது