பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௪

வடசொல் தமிழ்

கச வடசொல் தமிழ் சிசுருஷை - பணிவிடை சிட்சை, சிக்ஷை - கற்பித்தல், கல்வி பயிற்றல், ஒறுத்தல் சிருட்டி, சிருஷ்டி - படைப்பு சித்தம் - உள்ளம், நினைவு, கருத்து சித்தி - பேறு,ஆக்கம் சித்திரம் - ஓவியம், படம் சித்திரவதை - வன்கொலை சிநேகம், சிநேகிதம் கேண்மை - நட்பு, சிரஞ்சீவி - நீடுவாழ்வோன் சிரத்தை - அன்பு, முதன்மை, உளத்திட்பம், விருப்பு சிரம பரிகாரம் - துன்ப நீக்கம் சிரமம் - துன்பம், தொல்லை சிரவணம் - கேள்வி சிரார்த்தம் - இறந்தநாட்கடன் சிருட்டி - படைத்தல் ஸ்திரீதனம், ஸ்ரீதனம் - மகளுக் குக் கொடுக்கும் கொடை, மகட்கொடை ஸ்ரீமத் - திருவாளர் ஸ்ரீலஸ்ரீ - மறைத்திருவாளர் சிரேஷ்டம் - சிறப்பு சிரேஷ்டன் - தலைவன், மூத் தோன் சிலாகித்தல் - புகழ்தல் சிலாக்கியம் - மேன்மை, நன்மை சிலேட்டுமம் - சளி, கோழை சிவிகை - பல்லக்கு சிற்பம் - கற்றச்சு சின்னம் - அடையாளம் சின்னபின்னம் - உருக்குலைவு சீக்கிரம் - விரைவு, ஒல்லை. சீடன் - மாணாக்கன் கடிது சீணதசை - அழிவுகாலம், மழுக் சீதபேதி- வயிற்றளைச்சல் சீதம், சீதளம் - குளிர்ச்சி சீதோஷ்ணம் - தட்பவெப்பம் சீமந்தம் - சூல்காப்பிடுஞ்சடங்கு (கம் [சிசுருஷை சீமந்த புத்திரன் - தலைமகன் சீமந்தினி - பெண்மகள் சீரணம் - செரித்தல், பழுது சீர்ணோத்தாரணம் - பழுது சீலம் - ஒழுக்கம் [பார்த்தல் சீவசெந்து - உயிர்ப்பொருள் சீவகாருண்ணியம் - உயிர்க ளிடத்தன்பு, அருள் ஒழுக்கம் சீவனம் - பிழைப்பு சீவியம் - வாழ்நாள், பிழைப்பு, வாழ்க்கை சுகந்தம் - நறுமணம் சுகம் - நலம், இன்பம் சுகாதாரம் - நலவழி சுகிர்தம் - நன்மை சுக்கிரவாரம் - வெள்ளிக்கிழமை சுக்கிலபக்ஷம் - வளர்பிறை சுக்கிலம். வெண்ணீர், வெண்மை சுதந்திரம் - உரிமை சுதேசம் - தாய்நாடு சுத்தம் - தூய்மை, துப்புரவு சுந்தரம் - அழகு சுபாவம் - தன்மை, இயற்கை, இயல்பு சுயபாஷை - தாய்மொழி சுபிக்ஷம் - செழிப்பு சுயம்வரம் - தான் விரும்பும் மணம் சுயார்ச்சிதம் தான் தேடிய பொருள் சுயேச்சை - தன் விருப்பம் சுரஸம் - முறித்த சாறு சுரம் - காய்ச்சல், வெப்புநோய் சுருதி - குரல் சுலபம் - எளிது சுவதந்திரம் - உரிமை சுவர்க்கம் - துறக்கம், பேரின்ப சுவர்ணம் - பொன் சுவாசகாசம்- இளைப்பிருமல் சுவாசம் - மூச்சு,உயிர்ப்பு சுவாதிஷ்டானம் - கொப்பூழ்