பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௦

வடசொல் தமிழ்

.e.o வடசொல் தமிழ் பிரசவம் - பிள்ளைப்பேறு, கரு வுயிர்ப்பு பிரசாதம் - கடவுளுணா, தேவுணா, படைப்பு, அருள் பிரசாரம் - பரப்புதல் பிரசித்தி - வெளிப்படை, அறி லிப்பு, புகழ்பரவல் பிரசுரம் - வெளியீடு பிரதட்சிணம் - வலம்வருதல் பிரணவம் - ஓங்காரம் பிரதானம் - முதன்மை, சிறப்பு பிரதி - படி பிரதிகூலம் - மாறுபாடு, எதிர் பிரதிக்கினை - உறுதி. ஆணை, மேற்கோள் பிரதிஷ்டை -நிலைபெறுத்தல், கோயில் கொள்ளுவித்தல் பிரதிதினம்-நாடோறும், ஒவ் வொரு நாளும் பிரதிநிதி - ஆணையாளர் பிரதியுபகாரம் - கைம்மாறு பிரதிவாதி - எதிர் வழக்காளி பிரதேசம் - இடம் பிரத்தாபம் - அறிவித்தல். வெளிப்படுத்தல் பிரத்தியக்ஷம் - கண்கூடு. தெளிவு பிரத்தியேகம் - தனிமை பிரபஞ்சம் - உலகம் பிரபந்தம் - நூல், நூற்றொகுதி பிரபல்லியம் - புகழ், முதன்மை, சிறப்பு பிரபாவம் - புகழ், பெருமை பிரபு - பெருந்தகை, செல்வன், பிரமசாரி-மணமாகாதவன் பிரமா - நான்முகன் பிரமாணம் - அளவை, தலைமை மேற்கோள், ஆணை, கட்டளை பிரமாண்டம்- பேருலகம் பிரமாதம் - மிகுதி பெருஞ் தலைவன் [பிரசவம் பிரமானந்தம் - பேரின்பம் பிரமித்தல் - மலைத்தல், திகைத் தல், மருளல் பிரமேயம் - அளக்கப்படும் பொருள் பிரமை - மயக்கம், அறியாமை பிரமோற்சவம் பெருவிழா பிரயத்தனம் - முயற்சி பிரயாசை - முயற்சி, வருத்தம், பாடு, உழைப்பு, தொல்லை பிரயாணம் - பயணம், வழிப் போக்கு, வழிச்செலவு, பிரயோசனம் - பயன் [செலவு பிரலாபம் - புலம்பல் பிரவர்த்தி - முயற்சி, செய்கை பிரவாகம் - வெள்ளப்பெருக்கு பிரவேசம் - நுழைவு, முயற்சி பிரளயம் - அழிவுகாலம், உலக ஒடுக்கம், வெள்ளம் பிரளயாகலர் - இருமலக்கட்டி பிராகாரம் - கோயிற்சுற்று (னர் பிராகாமியம் - நிறைவுண்மை பிராணவாயு - உயிர்க்காற்று, உயிர்வளி,உயிர்ப்பு பிராணி-உயிரி, சிற்றுயிர் பிராது (அராபி) - முறையீடு, முறைப்பாடு பிராப்தம் - ஊழ்வினை பிராப்தி - விரும்பியதெய்தல் பிராமணன் - பார்ப்பான் பிரார்த்தனை - நேர்த்திக்கடன், வேண்டுகோள் பிரியம் - அன்பு,விருப்பம் பிரீதி - அன்பு, உருககம், அவா பிருதிவி - மண் பிரேதம் - பிணம் பிரேரேபித்தல் - முன்மொழி பீசம் - முளை, விதை [தல் பீடம் - இருக்கை, மேடை பீடை - துன்பம்,பீழை,நோய் பீதாம்பரம் - பொற்பட்டாடை