பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8(? வடநாட்டுத் திருப்பதிகள்

இச்சொல்விற்கு இரண்டு நிலைகள் உள்ளன. பிரிந்திருக் கும் நிலை சம்ஹிதாகாரம் என்றும், சேர்ந்திருக்கும் நிலை அசம்ஹிதாகாரம் என்றும் வ ழ ங் க ப் .ெ ப று ம். இப் பிரணவம் பிரிந்திருக்கும் நிலையில் அ, உ, ம, என்ற மூன்று எழுத்துகளாய், இம்மூன்று எழுத்துகளும், மூன்று சொற்களாய், மூன்று பொருள்களைத் தெரிவிக்கும். சேர்ந்திருக்கும் நிலையில் ஒரே எழுத்தாய், ஒரே சொல்லாய், ஒரு பொருளைத் தெரிவிக்கும். அஃதாவது, அகாரம் பகவானையும், அதில் ஏறி மறைந்துள்ள வேற்றுமை பிறருக்கு அ டி ைம ய ா யிருத்தலையும் (சேஷத்துவம்), உகரம் அந்த சேஷத்துவத்தின் மற்றவருக் கல்லாமல் இ ைற வ னு க் கே உரித்தாயிருத்தலையும் (அநந்யார்ஹத்துவம்), மகாரம் ஞானவானாகிய சீவனை யும் தெரிவிக்கின்றன. ஓம்’ என்று சேர்ந்திருக்கும் நிலையில் இறைவன் ஒருவனுக்கே அடிமைப்பட்டிருத்தல் (அநந்யார் ஹ. சேஷத்துவம்) என்பதைப் புலப்படுகின்றது.

இந்த மூன்று எழுத்துகளின் உற்பத்தி முறையைப் பிள்ளை உலக ஆசிரியர்,

“மூன்று தாழியிலே தயிரை கிறைத்துக் கடைந்து வெண்ணெய் திரட்டுமாப்போலே, மூன்று வேதத் திலும் மூன்று அட்சரத்தை எடுத்தது’’’

(அட்சரம் எழுத்து)

என்று குறிப்பர். இருக்கு, யஜுர், சாமம் என்று மூன்று மறைகளையும் துருவி ஆராய்ந்ததில், இருக்கு வேதத்தின் சாரமாக ‘பூ’ என்பது கிடைத்தது. யஜுர் வேதத்தின் சாரமாக புவ:” என்பது கிட்டியது; சாம வேதத்தின் சாரமாக லவ:” என்பதை அடைய முடிந்தது. இவை மூன்றும் பொன் கட்டிகளைப் போன்றவை. இந்த மூன்று

1. முமுட்சு-32