பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டம் கடிதகர் புருடோத்தமன் 83

மூன்று வேதங்களினின்றும் தோற்றுவித்தவன்; இந்த மூன்று எழுத்துகளையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே எழுத்தாக ஒம்’ என்ற பிரணவ மந்திரமாகச் செய்தவன்; இந்த மூன்று எழுத்துக்களாலான பிரணவத்தை மூன்று சொற்களாய் மூன்று பொருள்கட்கு வாசகமாக இருக்கும் அகார, உகார, மகாரங்களான மூன்று எழுத்துகளாகப் பிரித்தவன்; இவற்றுள் அகாரம் சீவான்மாவுக்குள்ள பகவானுக்கு அடிமைத் தன்மையைக் (பகவச்சேஷத்துவம்; கூறுவதாலும், உகாரம் தேற்றப் பொருளைக் கூறி அந்த அடிமைத் தன்மை பரமபதநாதனாகிய நாராயணன் பக்கலின்றி வேறு ஒருவர் பக்கல் வகிக்கத் தகாதது என்பதைத் தெரிவிக்கையாலும், மகாரம் ஞானத்தைக் கூறுவதாலும் இறைவன் ஒருவனுக்கே அ டி ைம ப் பட்டிருத்தலுக்கு (அநந்யார்ஹ சேஷத்துவம்) உரிய ஆன்மா தேகத்தினின்றும் வேறுபட்டது என்பதைப் புலப்படுத்துவதாக இருப்பதாலும் இம்மூன்றெழுத்து களையுமே தமக்குத் தஞ்சம் என்று கொண்டிருப்பவர்களின் பக்கல் தம் பேரருளைக் கிட்டச் செய்பவன்; பிரணவ பதத்தை நம பதத்துடனும் நாராயண பதத்துடனும் கூட்டி இம்மூன்று பதங்களில் ‘ஓம்’ என்பதில் இறைவன் ஒருவனுக்கே அடிமைப் பட்டிருத்தல் (அறிந்யார் இற சேஷத்துவம்) என்ற நிலையையும் நம: என்பதில் இறைவன் ஒருவனையே உபாயமாகப் பற்றியிருத்தல் (அநந்யார்ஹ சரண்யத்துவம்) என்ற நிலையையும், ‘நாராயணாய என்பதில் அவன் ஒருவனையே இனிய பொருளாகக் கொண்டிருத்தல் (அநந்ய போக்யத்துவம்) என்ற நிலையையும் தோற்றுவித்தவன்; இவற்றிற்கு எதிர்த் தட்டாகத் தலைமை நிலையையும் (சேவித்துவம்), தஞ்ச நிலையையும் (சரண்யத்துவம்), அடையப்படும் நிலையையும் (பிராப்யத்துவம்) கொண்டு திகழ்பவன்.

பாசுரங்கள் தோறும் கங்கையின் தன்மையும், எம் பெருமான் பெருமையும் நுவலப்பெற்றுள்ளன.ஏதேனும்