பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பிரிதி எம்பெருமான். 93

வேழம்-யானை; பிடி-பெண் யானை; இருகண்

இரண்டு கணுக்களையுடைய: தேன்-தேன்கூடு.1

மதம் பிடித்து மனம் போனபடி திரியும் ஒரு யானை தன் பேடையைக் காண்கின்றது. அதனை மீறி அப்பால் செல்ல மாட்டாமல் அதற்கு இனிய உணவு கொடுத்துத் திருப்தி செய்ய விரும்புகின்றது. உடனே அருகிருந்த இளமையான மூங்கிற் குருத்தொன்றைப் பிடுங்கி மலைக்குகையிலுள்ள ஒரு பெருந்தேன் கூட்டில் செருகி குலோப்ஜாமுன்போல் அதன் வாயில் ஊட்டுகின்றது. இந்தப் பாடல் திரு மங்கை யாழ்வாரின் பாடலுக்கு அடியெடுத்துக் கொடுத் திருக்கலாம். இந்த இரண்டு பாடல்களின் தாக்கத்தைக் கம்பநாடன் பாடலொன்றில் காணலாம்.

‘உருகு காதலில் தழைகொண்டு

மழலைவண்டு ஒச்சி

முருகு நாறுசெங் தேனினை

முழைகின்றும் வாங்கி

பெருகு சூல்.இளம் பிடிக்க ஒரு

பிறைமருப் பியானை

பருக வாயினில் கையில் நின்று அளிப்பன பாராய் !’

(முருகு-மணம்: நாறு-வீசுகின்ற முழை-கல் இடுக்கு பெருகு சூல்-முதிர்ந்த கருப்பம்; மருப்பு-தந்தம்1

இது சித்திரகூட மலையில் வரும் காட்சி. இங்கு ஒர் ஆண் யானை சூல் கொண்டுள்ள தன் இளம் பிடியின் மீது அளவற்ற அன்பு கொண்டுள்ளது. ஒரு மலை இடுக்கில் ஒரு பெரிய தேன்கூடு; அதில் தேன் ததும்பி நிற்கின்றது. ஆண் யானை அண்மையிலுள்ள மரத்தி னின்றும் ஒரு தழைக்கொத்தினை ஒடித்து அதனைக்

8. கம்பரா. அயோத். சித்திரா-10