பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமதுரைப் பிறந்த மாயன் 16)

என்று நம்மாழ்வார் பாசுரங்களில் ஆழங்கால் பட்டுக் கண்ணனைச் சேவிக்கின்றோம்.

இத்திருக்கோயிலின் அருகில் வாசுதேவர்-தேவகிக்குக் கம்சன் அமைத்த சிறையின் நினைவாக ஒரு சிறைக் கூடமும் நல்ல முறையில் சலவைக்கல்லால் அமைக்கப் பெற்றுள்ளது. கம்சவதம் நடந்த இடம், குவலயா பீடத் தின் மருப்பொசித்த இடம், கம்சவதமானதும் கண்ணன் சிரமபரிகாரம் செய்து கொண்ட யமுனைத்துறை (விக்ராந்தி கட்டம்) முதலியவை இங்குக் காணத்தக்கவை. கண்ணன் அவதரித்த பூமியிலும், விக்ராந்தி கட்டத்திலு முள்ள திருக்கோயில்களில் மாலையில் தொடங்கி நடை பெறும் பசனையையும், மக்கள் அதில் பரவசப்படுவதை யும் சொற்களால் எடுத்துக் கூற முடியாது.

மதுரை நகரினுள் துவாரகை நாதர்கோயில், மதுரை நாதர்கோயில் என்ற இரு திருக்கோயில்கள் உள்ளன. இவை இரண்டும் அண்மையில் கட்டப்பெற்றவை. வட மதுரையில் பிறந்து, ஆயர்பாடியில் வளர்ந்து, வியக்கத் தக்க தனது செயல்களால் பெருமையுற்ற கிருஷ்ணனுக்கு ஒரு திருக்கோயிலை எழுப்புவது நியாயந்தானே. அங் ங்ன்மே.துவாரகை சென்று மன்னனாக மகுடம் சூட்டிக் கொண்டு அரசோச்சியதன் நினைவாக ஒரு திருக்கோயி லையும் எழுப்பியுள்ளனர் வடமதுரை மக்கள். துவாரகை நாதர் திருக்கோயில் கடைத்தெருவில் உள்ளது. இது வல்லபர் நிறுவிய சமயத்தைச் சார்ந்த (புஷ்டிமார்க்கம்) இலட்சுமி சந்த் என்ற சேட் ஒருவரால் அதிக பொருட் செலவில் கட்டப் பெற்றது. இந்த சேட்ஜியின் குடும்பத் தினர்தாம் பிருந்தாவனத்தில் ஆண்டாள்-அரங்கமன்னா ருக்கு அரங்கமந்திர் என்ற திருக்கோயிலை நிறுவுவதில் துணை புரிந்தவர்கள்.

துவாரகைநாதர் திருக்கோயில் கிருஷ்ணன் தனியாகக் காட்சி தருகின்றான்; தேவிமார்கள் அருகில் இல்லை; தேவி