பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Il4 வடநாட்டுத் திருப்பதிகள்

கோயிலின் கைங்கரியத்திற்காகச் சுமார் 30 வைணவக் குடும்பங்கள் தென்னாட்டினின்றும், சிறப்பாகக் காஞ்சிப் பகுதியினின்றும் வந்தவர்கள் குடியிருக்கின்றனர்.

அரங்கமந்திர் 1849-ல் (விக்ரம ஆண்டு) பிரதிஷ்டை செய்யப்பெற்றது. பாஞ்சராத்ர ஆகம விதிப்படி ஆறு காலத் திருவாராதனமும் திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன. கருவறையில் ஆண்டாள், அரங்கமன்னார் சந்நிதியும் உட்பிராகாரத்தில் திருவேங்கடமுடையான், இராமன், திருவரங்கன் சந்நிதிகளும், ஆழ்வார், ஆசாரியர் களின் சந்நிதிகளும் உள்ளன. தமிழகக் கோயில்களில் இருப்பவை போன்ற வாகனங்களும் அழகிய தேரும் உள்ளன. சைத்ர கிருஷ்ண திருதியை முதல் பத்து நாட் கள் பெருந் திருவிழா (பிரம்மோற்சவம்) சிறப்பாக நடை பெற்று வருகின்றது. இத்திருக்கோயிலில் காலை மாலை வேளைகளில் நிகழும் ஆழ்வார்களின் அருளிச் செயல் முழக்கம் செவிக்கினிய விருந்தாக அமைகின்றது.

கோவர்த்தனம் அரங்காச்சாரியார்: மேற்குறிப்பிட்ட சிறப்புகளைச் செவ்வனே நடைபெறச் செய்து வட நாட்டில் தமிழ்ப் பிரபந்த முழக்கம் செய்த பெருமகனார் கோவர்த்தனம் அரங்காச்சாரியார்: சீபெரும்புதூருக்கும் காஞ்சிக்கும் இடையேயுள்ள அகரம் என்ற சிற்றுாரில் 1809-ல் (ஐப்பசி புணர்வசு) பிறந்தார். இளமையிலேயே பெற்றோரை இழந்தார்; பாட்டனார் வாழ்ந்த திருவிட எந்தையில் வளர்ந்தார். காஞ்சியிலும் சீபெரும்புதூரிலும் திகழ்ந்த பெரியோர்களிடம் கற்றுத் தென்மொழி வட மொழிகளில் வல்லவரானார். வைணவ சம்பந்தமான சமய நூல்களையும் கற்றுத் தெளிந்தார். வடநாட்டுத் திருத்தலப் பயணத்தை மேற்கொண்டு கண்ணன் பிறந்து விளையாடின விரஜபூமிக்கு வந்து, அங்குள்ள புனிதமான இடங்களைச் சேவித்து கோவர்த்தனத்தை அடைந்தார். அச்சமயம் கோவர்த்தனத்தில் வைணவ ஆசாரிய பீடம்