பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 வடநாட்டுத் திருப்பதிகள்

கின்றார் பூதத்தாழ்வார். திருமங்கையாழ்வார் இந் நிகழ்ச்சியை,

“சுரிந்திட்ட செங்கேழ் உளைப்பொங் கரிமாத்

தொலையப் பிரியாது சென்றெய்தி, எய்தா திரிந்திட் டிடங்கொன டடங்காத தன்வாய்

இருகூறு செய்த பெருமான்’ (சுரிந்திட்ட சுருண்டு நின்ற: செம்கேழ்-செந்நிறம்;

உளை-பிடரி மயிர்; அரிமா-குதிரை வடிவினனான

கேசி, பிரியாது-விடாது; எய்தாது-கிட்டிவராமல்;

இரிந்திட்டு-அங்குமிங்கும் திரிந்து கொண்டு) என்ற பாசுரத்தில் அதுசந்தித்து அகம் மிக மகிழ்கின்றார்.

கன்றினால் விளவெறிந்தது : கம்சனால் ஏவப்பெற்ற

கவித்தாசுரன் விளாமரத்தின் வடிவமாய்க் கன்று மேய்க்கும் கண்ணன் தன் கீழ் வரும்போது மேல் விழுந்து கொல்வதாக எண்ணி வந்து நிற்கின்றான். அவ்வாறே வத்சாசுரன் என்பான் கிருட்டிணனை முட்டிக் கொல்லும் பொருட்டுக் கன்றின் வடிவமாக வந்து காத்திருக் கின்றான். இதனை நன்கு அறிந்த கண்ணன் அக் கன்றின் கால்களைப் பற்றிச் சுழற்றி விளாமரத்தின்மீது வீசி எறிய, இருவரும் சிதைந்து தமது அசுர வடிவத்துடன் விழுந்து இறக்கின்றனர். இந் நிகழ்ச்சியினை ஆழ்வார் பெருமக்கள் நினைந்து பாசுரங்கள் அமைத்து அநுபவிக் கின்றனர். இங்ஙனம் முள்ளை முள்ளாற் களைவதுபோல் அசுரனை அசுரனைக் கொண்டே களைந்த வரலாற்றைப் பெரியாழ்வார்,

‘கற்றினம் மேய்த்துக் கணிக்கொரு கன்றினைப்

பற்ற எறிந்த பரமன்’ என்று பேசி இனியராகின்றார். திருமங்கையாழ்வார், ‘கன்று அதனால் விளைவு எறிந்து கனி உதிர்த்த

12. பெரி. திரு. 10. 6:9 13 பெரியாழ். திரு. 2.5:5