பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண் துவராபதி மன்னன் 445

என்று தன்மீது பரிவுள்ளவர்களை நோக்கி வேண்டு கின்றாள். திருமங்கையாழ்வார் “முது துவரைக் குலபதி’ என்றும் ‘வண் துவரை நட்டான்’ என்றும் குறிப்பிடுவதுடன் நின்று விடுகின்றார்.

கிருட்டினன் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த துவாரகை கடலில் மூழ்கிவிட்டது என்பதைப் புரானங் களால் அறிகின்றோம். துவாரகை என்பது அகன்ற துவாரத்தையுடையது எனப் பொருள்படும். காலயவனன் என்பான் ஒரு பெருஞ் சேனையுடன் வடமதுரையை முற்று கையிட்டபோது அவனால் யாதவர்கட்கு என்ன தீங்கு நேருமோ என்ற கருத்தினால் கண்ணன் கடலிடையே இந்நகரை நிறுவி யாதவர்கனைனவரையும் குடியேற்றி அரசாண்டதாக வரலாறு. இன்றுள்ள துவாரகை பிற் காலத்தில் நிறுவப்பெற்றதாகும். இந்தத் துவாரகையைத் தவிர, இங்கிருந்து சுமார் 50 கி. மீ. தொலைவிலுள்ளது பெட் துவாரகை என்பது. இது ஒரு தீவு படகின் மூலம் தான் இதனைச் சென்று அடைதல் வேண்டும். இங்கு இராஜஸ்தான் பாணியில் பல கட்டடங்கள் கானப்பெறு இன்றன. வழிகாட்டுவோர் இவற்றைக் கண்ணன் அரண் மனை, தேவிமார்களின் அரண்மனை என்று கூறி நம்ம்ை மயக்குவார்கள். புராணங்களில் குறிப்பிட்டவாறு ஒவ்வொரு தேவிமார்க்கும் தனித்தனி அரண்மனைகள் இல்லாமையால் இவர்தம் கூற்றைக் கற்பனையாலும் ஒப்புக் கொள்வதற்கில்லை.

இங்ஙனம் பல செய்திகளை அறிந்த நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரம் நினைவிற்கு வருகின்றது.

திறந்திறமாத் தான்துய்க்கும்

தீஞ்சுவையை நாடி

18. பெரி. திரு. 6. 6:7 19. . 6. 8:T

33–10