பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 46 வடநாட்டுத் திருப்பதிகள்

அறக்திறம்பிப் பாதகரோர்

ஐவர்-நறுந்துளவ மாதுவரை யோனே!

மனத்துணையாக் கொண்டென்னைக் காதுவரை யோமெய் கலந்து’.” (திறம் திறமா-விதம் விதமான; தீஞ்சுவை-இன் சுவைப் பொருள்கள்; நாடி-தேடி, அறம் திறம்பிஅறவழி தவறி: காதுவர்-இடைவிடாது வருத்துவர்; மெய்-உடல்.) என்பது பாசுரம், இதனை ஒதி உளங்கரைகின்றோம், ‘மனம் ஆளும் ஒரைவர் வன்குறும்பராம்’ ஐம்புலன்கள் மனத்தைத் தமக்கு உற்ற துணையாகக் கொண்டு உடலின் உள்ளாகவே நன்கு கலந்திருந்து தத்தமக்குரிய பொருள் களை விரும்பி என் உயிரை வருத்திக் கொல்லுகின்றன; இவற்றை நின் அருளென்னும் தண்டாலடித்து அவற்றின் வலியொடுக்கி எனக்கு நற்கதி அளிக்க வேண்டும்’ என்று. துவரை நாதனை வேண்டுகின்றார் அய்யங்கார். அவரைப் பின்பற்றி நாமும் அவனை இங்ஙனமே வேண்டி நம் இருப் பிடத்திற்குத் திரும்புகின்றோம். சில சமயம் அய்யங் காரின் திருப்பாசுரங்கள் நம்மாழ்வாரின் பெரிய திருவந் தாதித் திருப்பாசுரங்கள்போல் அமைந்து நம்மைப் பரவச மாக்குகின்றன.

20. நூற். திருப். அந்-105 21, பெரிய திருவந்-51