பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயர்பாடி அணிவிளக்கு

இதனைக் கண்ட ஆய்ச்சியர் யாவரும் வெருண்டு ஓடினர். யசோதைப் பிராட்டி மட்டிலும் கண் ண ைன வாரியெடுத்து முலையூட்டினாள்.

“பேய்ச்சிமுலை உண்ணக் கண்டு

பின்னையும் நில்லாது என்நெஞ்சம் ஆய்ச்சியர் எல்லோரும் கூடி

அழைக்கவும் நான்முலை தந்தேன்.’ என்று பெரியாழ்வார் இந்நிகழ்ச்சியைத் தம் பாசுரத்தில் அநுசந்திக்கின்றார். இன்னொரு பாசுரத்தில்,

“கஞ்சன் கறுக்கொண்டு கின்மேல்

கருநிறச் செம்மயிர்ப் பேயை வஞ்சிப்ப தற்குவி டுத்தான்

என்பது ஓர் வார்த்தையும் உண்டு.” என்று இந்நிகழ்ச்சியைப் போற்றி மகிழ்கின்றார். திருமங்கையாழ்வார், பேய்த்தாயை முலை உண்ட பிள்ளை தன்னை” இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு’, ‘வஞ்சம் மேவி வந்த பேயின் உயிரை உண்ட மாயன்” என்று இந் நிகழ்ச்சியை அதுசந்திக்கின்றார். நம்மாழ்வார் ‘பெய்யும் பூங்குழல் பேய் முலை உண்ட பிள்ளைத் தோற்றமும்’, ‘வஞ்சப் பெண்ணைச் சாவப் பால் உண்டதும்” என்று இச்சிறு சேவகத்தில் ஆழங்கால்பட்டுத் தன்னையே மறக்கின்றார்.

பகாசுரன் வரலாறு : பகாசுரன் என்பவன் கிருஷ் ணனைக் கொல்லுமாறு கம்சனால் ஏவப்பெற்ற அசுரர் களில் ஒருவன். இவன் பெரியதொரு கொக்கின் வடிவங் கொண்டு வழக்கமாகக் கண்ணனும் அவன் தோழர்களும்

18. பெரியாழ். திரு. 2.4:3 22. . 4, 8 : 2 19. . 2, 8 : 6 23. திருவாய் 5. 10.3 20. பெரி திரு. 2. 5 : 4 24. . 5. A : 4

21. . 8, 8 : 5