பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 வடநாட்டுத் திருப்பதிகள்

வடமொழி அறிவு அவருக்குப் பலவகையில் கைகொடுத்து உதவியது. அவருடைய கீதைப் பேருரையும், பிரம்ம சூத்திரப் பேருரையும் அவரை வடநாட்டினர்க்கும் அறிமுகம் செய்து வைத்தன. இதனால் இராமாநுசரின் புகழ், நாட்டின் நாலாபுறங்களிலும் பரவியது. இதனால் அவர் மிக நெருங்கிய உறவுடன் கைங்கரியம் செய்து வந்த திருவேங்கடமுடையானின் பெருமையும் சிறப்பும் எங்கும் பரவி, திருவேங்கடத்திற்கும் ஒரு முக்கியத்துவம் ஏற்படலாயிற்று. இவற்றைத் தவிர, சைவ வைணவ வாக்குலாதம் பற்றிய வரலாறும் திருமலையின் புகழ் எங்கும் பரவக் காரணமாக இருந்தது.இந்த வரலாற்றைச் சுமார் 700 ஆண்டுகட்கு முன்பிருந்த பின்பழகிய பெருமாள் சீயர் அருளிய ஆறாயிரப் படிக் குருபரம்பரை யிலும் இராமாநுசாசாரியாரின் திவ்விய சரிதையிலும் காணலாம்.

திருவேங்கடத்தின் சிறப்பு வைணவ தத்துவம் சித்து, அசித்து, ஈசுவரன் என்று மூவகைப்பட்டிருக்கும். இதனைத் *தத்துவத் திரயம்’ என்று வழங்குவர் வைணவப் பெருமக் கள், சித்தும் அசித்தும் ஈசுவரனுக்கு உடலாக அமைந்திருக் கும். இந்த உறவினைச் சரீர-சரீரி பாவனை என்று போற்றியுரைப்பர் அப்பெருமக்கள். அசித்தும் எம்பெரு மானுடைய படைப்பாகி அவனுடைய திருமேனியாகத் திகழ்வதால் அதுவும் வழிபாட்டிற்குரியது.

‘சென்று சேர்திரு வேங்கட மாமலை ஒன்று மேதொழ கம்வினை ஒயுமே?

என்ற நம்மாழ்வாரின் பாசுரம் இக்கருத்திற்கு அரண் செய்வதாக அமைகின்றது. அசித்தின் பெயரைச் சொன்ன உடனேயே எம்பெருமான் மனமகிழ்ந்து

7. திருவாய், 3.3; 8.