பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயோத்தி நகர்க் கோமான்

45


யில் தெரியுமாறு அமைக்கப்பெற்றுள்ளது. இதனைக் காணுங்கால் அதுமன் அசோகவனத்தில் சீதாப்பிராட் டிக்குக் காட்டின பேருருவம் நினைவிற்கு வருகின்றது. இத்திருக் கோயிலெங்கும் இராம பக்தர்கள் துளசி ராமாயணத்தைப் படித்த வண்ணம் உள்ளனர். தாம் கோரிய யாவற்றையும் அளிக்க வல்லவன் மாருதி என்ற நினைப்பில் இச்சீரிய பணியில் ஈடுபட்டுள்ளனர் போலும். இச் சொல்லின் செல்வனை வணங்கி விடைபெற்று நம் இருப்பிடத்தை அடைகின்றோம்.

அயோத்தி - பகைவர்களால் போர் செய்து வெல்ல முடியாதது என்பது பொருள். அரண் முதலியவற்றால் மிக்க பாதுகாவலையுடையது. பழங்காலத்திய அயோத்தி இப்பொழுதுள்ள தீர்த்தங்களில் ஒன்றாகிய சகஸ்திர தாரையில் மேற்குத் திக்கில் ஒரு யோசனையும், கிழக்குத் திக்கில் ஒரு யோசனையும், வடக்குத் திக்கில் சரயு நதியும், தெற்குத் திக்கில் தமசா நதி வரையிலும் இருக்குமாறு பரவியிருந்தது என்று சொல்லப் பெறுகின்றது. இதனை யும் அறிந்துகொள்ளுகின்றோம். இராம காதையில் ஈடுபாடுகொண்ட அனைவருக்கும் திருவயோத்தியின் திருத்தலப் பயணம் மிக்க மனநிறைவினைத் தரும் என்பதற்கு ஐயம் இல்லை. இன்று தமிழ் நாடெங்கும் கொண்டாடப் பெறும் கம்பன் விழா கம்பன் திருநாள் நிகழ்ச்சிகளில் இராமபிரானின் கீர்த்தியே மகிழ்ச்சியுடன் பேசிப் போற்றப் பெறுகின்றது.