பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& வடநாட்டுத் திருப்பதிகள்

இங்குள்ள திருக்க்ோயிலில் உள்ள எம்பெருமானின் திருநாம்ம் தேவராசன், ஸ்ரீஹரி, தாயார் இலக்குமி,புண்ட ரீசுவல்வி, எம்பெருமான் கிழக்கு நோக்கிய் திருமுக மண்டலத்துடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக் கின்றார். அகோபில மடத்து 43-வது ஜீயர் இங்கு எழுந் தருளினபோது திருநாடு அலங்கரித்துவிட்டார். இவரு டைய சமாதி இங்கு உள்ளது. அகோபில மடத்துக் கிளை ஒன்று இங்கு நிறுவப்பெற்றுள்ளது.

இத் திருத்தலத்து எம்பெருமானைத் திருமங்கை யாழ்வார் ஒரு திருமொழியால் மங்களாசாசனம் செய் துள்ளார். பெரிய பிராட்டியாரின் முன்னிலையாகச் சரணம் புகுகின்றார் ஆழ்வார். தேனுடைக் கமலத் திருவினுக்கரசே! திருவடி அடைந்தேன்’ என்று பிராட்டி யாரை முன்னிட்டுப் பிரபத்தி பண்ணுவதைக் காண்க. இத்திருமொழியில் எம்பெருமானுடைய மேன்மைகளை யும் தம்முடைய தாழ்வுகளையும் வெளியிட்டுக கொள் கின்றார் ஆழ்வார். எம்பெருமானிடம் அடைக்கலம் புகும் போது இங்ஙனம் செய்யவேண்டும் என்பது சாத்திர விதி. ஆர்த்தியின் கனத்தாலே தம்முடைய குறைகளெல்லாம் நினைவுக்கு வருமாகையால் தம்முடைய குற்றங்களை யெல்லாம் விரிவாகப் பேசிக்கொண்டு சரணாகதி பண்ணு கின்றார்.

இத் திருத்தலத்திற்கு வந்து சேர்ந்ததும் ஆழ்வார் பாசுரங்களில் உள்ள கருத்துகள் நம் சிந்தையில் குமிழி யிடத்தொடங்குகின்றன. செய்யவேண்டிய வினைகள் என்று விதிக்கப்பெற்றுள்ள நல்வினைகளைச் செய்யா தொழிதலும், செய்யலாகாதென்று விலக்கப்பெற்றுள்ள தீவினைகளைச் செய்தலும் ஆகிய இருவகைக் குற்றங்கள் சாத்திரங்களில் கூறப் பெற்றுள்ளன. இந்த இருவகைக்

2. Guf. . . 3. . 1.5:9