பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வடநாட்டுத் திருப்பதிகள்

எண்ணினேன்; குறுக்கு வழியில் பொருள் திரட்டி விடலாம் என்று திட்டம்போட்டு அவன் வீட்டில் புகுந்து. கொள்ளை அடித்தேன்; அப்பொருளைச் செலவிட வேண்டிச் சுரிகுழல் மடந்தையர் திறத்துக் காதலே மிகுந்து கண்டவாறு திரிந்தேன்; மனம்போனவாறெல்லாம் பொருள் திரட்டத் தொடங்கினேன் (3); மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரத்தை நாடித் திரிந்தேன் (4): கவளச் சோற்றுக்கு இரங்கிக் கேட்டவர்கட்கு இல்லையே என்று சொன்ன நீசனானேன் (5); நான் உயிர்க் கொலை புரிந்ததற்கும் ஒர் எல்லை இல்லை. (6), நெஞ்சினால் நினைந்தும், வாயினால் மொழிந்தும், நீதியில்லாதன செய்தும் அர்ச்சிராதி மார்க்கத்தினின்றும் வழிவிலகி, துரமாதி மார்க்கமே நித்தியம் என எண்ணிவிட்டேன் (7): இங்ஙனம் பல வழிகளிலும் கெட்டுழந்த ஆழ்வார்க்கு அவனருளாலே அவன் தாள் வணங்கும் பேறு கிட்டத் தொடங்குகின்றது. நல்வழியில் சிந்திக்கத் தொடங்கு கின்றார்.

இருள் தருமா இவ்வுலகில் தோன்றிய உடல் ஒரு குடிசைபோல் தோன்றுகிறது. இக்குடிசையில் எலும் புகள் தூண்களாக நடப்பெற்று இடைஇடையே மாமிசத்தாலான சுவர்கள் வைக்கப்பெற்றுள்ளன. உரோமங்கள் மேலே வேயப்பெற்ற இக்குடிசைச்கு ஒன்பது வாயில்கள் உள்ளன. இக் குடிசையில் ஆன்மா குடிசையை விட்டு வெளிக்கிளம்பும் காலமே மரணம் ஆகும். இங்ஙனம் மரணம் நேர்ந்த பிறகு இவ்வான்மா அடைய வேண்டிய இடம் எம்பெருமானின் திருவடிகள் என்ற எண்ணம் ஆழ்வார் சிந்தையில் எழுகின்றது (9). இதனைத் தவிர யம பயமும் அடிக்கடி இவர் சிந்தையில் எழுகின்றது. ‘நமன் தமர் செய்யும் வேதனைக் கொடுங்கி நடுங்கினேன்” (3) என்கின்றார். எமபடர்கள் செய்கின்ற கொடுமைகளை விட அவர்தம் சொற்கள் கூரியவை. கடுஞ்சொலார் கடியார் காலனார் தமரால்