பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வடநாட்டுத் திருப்பதிகள்

சடங்கு முறைச் சம்பிரதாயத்தை மேற் கொண்டிருந்த, வைணவர் ஒருவர் இக் குழப்பத்தை அடிக்கடிக் கான நேர்ந்தது. இஃது அவருக்கு தெய்வத்தைப் பழிப்பதாகத் தோன்றியது. அவர் அந்த அடியாரை அண்மி மதிப் பிழந்த அந்தச் சாலிக்கிராம எம்பெருமானைத் தம். மிடம் தருமாறு வேண்டினார். அவருடைய வேண்டு கோளுக்கிணங்க அடியாரும் அந்தச் ‘தெய்விகச் சொத்தினை அந்த வைணவரிடம் மகிழ்ச்சியுடன் தந்து விட்டார். அந்த வைணவர் அந்த எம்பெருமானை இல்லத்திற்கெடுத்துச் சென்று, மந்திரங்களால் தூய்மைப் படுத்தி, சாத்திர மரியாதைகள் சிறிதும் குறையாது. எல்லாவிதச் சடங்குகளும் திகழும் முறையில் வழிபாடுகள் நடத்தினார். எம்பெருமான் அவருடைய கனவில் தோன்றி, மூடனே, நான் அடியாரின் தாம்பூலப் பெட்டி யாகிய திருக்கோயிலில் மகிழ்வுடன் தங்கியிருந்தேன்; அவர் நம்மாழ்வாரின் திருவாய்மொழியை உயிராகவும்: ஆன்மாவாகவும் கொண்டவர். அவருடைய தூய்மை யான திருவாயில் அமுதம் போன்ற எச்சிலில் நீராடும். வாய்ப்பு எனக்கிருந்தது. நம்மாழ்வாரின் திருவாய் மொழியிலிருந்து தேனும் பாலும் கன்னலும் அமுதமும் எனத் தித்திக்கும் திருப்பாசுரங்களைக் கேட்டு மகிழும். பேறும் இருந்தது. நீ அவற்றையெல்லாம் எனக்குக் கிடைக்காமல் செய்ததுடன் சோர்வைத் தரும் பூசனை கட்கு என்னை உட்படுத்துகின்றாய்” என்று கூறினார். வைணவர் இந்தக் கணவால் திடுக்கிட்டெழுந்து. தடுமாற்றத்திற்குள்ளானார். உடனே அவர் விரைந்: தோடி அடியாரை அடைந்து அந்தச் சாலிக்கிராம எம் பெருமானை அவரிடம் சேர்த்துவிட்டார். எம்பெருமானும் மனநிறைவுடன் தாம்பூலப் பெட்டியிலேயே திருக்கோயில் கொள்ளலானார்’. இந்த நிகழ்ச்சி அர்ச்சாவதாரத்தின்

2. பகவத் விஷயம்-தொகுதி wi 6.8:10 வந்திருந்து’ என்ற பாசுரத்.

தின் வியாக்கியானம் காண்க.