பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கலைஞர் பேசி முடிந்ததும் விழா வேந்தன் பச்சைக் கொடி காட்ட வேண்டியதுதான் பாக்கி. கூட்டம் அந்த நிகழ்ச்சிக்காக ஆவலுடன் காத்திருந்தது. இன்னும் கொஞ்ச கேரத்தில் கொடி அசையப் போகிறது தேர் நகரப் போகிறது! புள்ளி தேர்த்தட்டு விளிம்பில் வந்து கின்று கீழே கிற்கும் அதிபர்களையும், கூட்டத்தையும் போட்டோ எடுத்துக்கொண் டிருந்தார். - - பிரமுகர்களில் பிரெஞ்ச் பிரசிடென்ட் க்ரே கலர் சூட் அணிந்து கடுநாயகமாகத் தெரிந்தார். மற்ற நாட்டுத் தலைவர் களும் அதே அணியில் அமர்ந்திருந்தார்கள். . புள்ளி எப்போது மற்றொரு காமிராவை எடுத்து பிரமுகர்களைச் சுடப் போகிறான்? பென்னட் தவித்தான்! ஷாமாசிச்சி இந்தியப் பெண்களைப்போல் உடை அணிந்து நடனமாடத் தயாராயிருந்தாள். அவள் கண்கள் காலா பக்கமும் வீசின. வலது ஒரம் தூரத்தில் சிவப்பு நிறப் பாண்ட்டின் மீது அவள் குறி! அந்த பாண்ட்டை அணிந்திருப்பவன் யுமாட்டா. ஜப்பானின் ரகசிய இலாகாவின் ஆர். டி. என்ற பிரிவின் தலைவன். $ •. - படிமர்சிச்சி எதாவது சந்தேகமாத் தெரியுதா?' என்று கேட்டான் யுமாட்டா தனது வொயர்லெஸ் மூலம்! ஷாமாசிச்சி காதில் ரகசியமாகச் சிறு கருவி பொருத்தப் பட்டிருந்தது. அவள் மார்புத் துணியோடு சின்ன மைக் ஒன்றும் ஒட்டியிருந்தது. அவள் பதில் சொன்னாள்: - "யுமாட்டாஸ்ான்! இதுவரைக்கும் ஒன்றும் தெரியலையே!' தேர்த்தட்டிலே கவனிச்சியா!' "கவனிச்சேன்! எல்லாரும் இந்தியர்கள்தான்!" . "எல்லோரும் விழாவுக்கு வந்திருப்பவர்கள்தானே? வேற்று முகம் இருக்கிறதா?" "இல்லை" 'அது யாரு! எவனோ ஒரு இந்தியன் கையிலே காமிராவோட கண்டதையெல்லாம் படம் எடுக்கிறானே!" . 39