பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அவன் இந்திய கோஷ்டி ஆள்தான். அமெச்சூர் காமிராக்காரன்!' - - "அவனிடம் இன்னொரு காமிரா இருக்குதே, பா ர்த்தாயா?" ஷ-மாசிச்சி நாட்டிய பாவனையில் முகத்தைத் திருப்பிக் கண்ணோட்டமிட்டாள். "ஆமாம்; இரண்டாவது காமிரா தெரிகிறது. அது ஏது அவனிடம்' - - - ஒட்டல் அறையில் அவன் ஒரே ஒரு கானன்' காமிராவை மட்டும் வைத்துக்கொண்டு அலைந்தது அவளுக்குத் தெரியும் இரண்டாவது காமிரா அவனிடம் எப்படி, எப்போது வந்தது? காமிராவை உற்றுப் பார்த்தாள். ஒரு ஓரத்தில் மினால்டா' என்று போட்டிருந்தது. - - . மினால்டா காமிரா வகைகள் அத்தனையும் அவள் பார்த் திருக்கிறாள். அத்தனையும் அவளுக்கு அத்துபடி! ஆனால், இது போன்று ஒரு விசித்திரமான காமிராவைப் பார்த்ததில்லை. - Կատ கன ஜோராக வளைய வந்தார். கலர்ப் படங்களை இஷ்டத்துக்கு எடுத்துக் கொண் டிருந்தார்! - ஒவ்வொரு முறை எடுத்த பிறகும் அவர் கூட்டத்தின் இடது பக்கம் பார்த்துக்கொண்டிருந்தார். அங்கேதான் அந்த கரம் இருந்தது. அவரது கண்கள் அடிக்கடி அந்த மரத்தை கோக்கிப் போயிற்று. மரத்தின் அருகே ஜார்ஜ் வருவதாகச் சொல்லியிருந்தான்! 'பூப்போட்ட குடையை விரிப்பேன். என்னை அடையாளம் கண்டுகொன்' என்று கூறியிருந்தான். புன்னிக்குக் கண் புத்துப் போயிற்று. லட்சக் கணக்கான பெருக்கு இடையே ஜார்ஸ் எங்கே சிக்கிக்கொண்டிருக்கிறானோ? ‘இவன் வர்றதுக்குள்ளே தேர் கிலைக்கு வந்துடும் போல இருக்கே!' என்று பூசபரத்தார். - 100.