பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பறந்து வந்த ஜப்பானிய ஒற்றன் ஒருவனுடைய கால் ராக்கெட்போல் வந்து அந்தக் காமிராவை உதைத்து ஆகாயத்தில் பறக்க விட்டது. "அடேய் அநியாயக்காரா!' என்று புள்ளி கூச்சல் போட, தேர்த்தட்டில் ஒரே களேபரம்! அதே நேரம் அந்த மரத்தின் பக்கத்திலும் ஒரு பொய். வெடிச் சத்தம் கிளம்புவதைக் கேட்டு ஏராளமான ஜப்பானிய ஒற்றர்கள் ஏவுகணைகள்போல் வந்து குதித்தார்கள்! திமிறிக் கொண்டு ஒடப் பார்த்த பென்னட்டையும், ஜர்ர் ஜையும் எளிதாகப் பிடித்து அமுக்கிவிட்டார்கள். தேருக்கு வெளியே விழுந்த அந்தக் காமிரா வைத் துரக்கி, புல்லட் வெளிவர முடியாத அளவுக்கு அதை ஒரு பைக்குள் போட்டு வெகு தூரம் கொண்டு போய்விட்டார்கள் சில ஜப்பானிய ஒற்றர் கள். - - - எல்லாம் இமைக்கும் நேரத்தில் கடந்த முடிந்துபோயிற்று. சிலருக்குத்தான் ஏதோ கசமுசா கடந்ததுபோல் லேசாகத் தெரிந்தது. ஆனாலும், என்னவென்று தெளிவாகப் புலப்பட வில்லை. நூற்றுக்குத் தொண்ணுTற்றொன்பது பேருக்கு கடந்தது எதுவுமே தெரியவில்லை. மறுநாள், பிரெஞ்ச் பிரசிடெண்ட் கொல்லப்பட இருந்த தையும், அவரைக் கொல்வதற்காக ஒரு வெள்ளைக்காரக் கூட்டம் ஜப்பானுக்கு வந்து ரகசிய வேலை செய்ததையும், கிஜிம7, ஷாமாசிச்சி, ஐஸ்க்ரீம் பார்லர் முதலாளி மூலமாக அதைத் துப்பறிந்து ஜப்பானிய அரசு ஒற்றர்கள் முறியடித்ததையும், தினசரி பத்திரிகைகளில் மக்கள் பக்கம் பக்கமாய்ப் படித்தார்கள். ஜார்ஜின் கவனப் பிசகினால் அவன் பார்லரில் மறந்து விட்டுப்போன் டயரியை ஷாமாசிச்சி, பார்லர் முதலாளி, கிஜிமா மூவருமே படித்து விட்டிருந்தார்கள். எனினும், பிரெஞ்ச் .பிரசிடெண்டை ஜார்ஜ் குழுவினர் எப்படிக் கொல்லப்போகிறார்கள் என்பது மர்மமாகவே இருந்தது. ஜப்பானிய ஒற்றர்கள் எல்லா விதமாகவும் யோசித்து அதற்குத் தக்கபடி திட்டமிட்டு வைத் திருந்தார்கள்! அவர்களது அசாத்தியமான திறமையும், எச்சரிக்கை உணர்வும், மதிநுட்பமும்; கவனமும்தர்ன் அந்தச் சூழ்நிலையை முறியடித்தது. - T04