பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரம் திருப்புகழ் பாடிக்கிட்டு வரிசை வரிசையா அணி வகுத்துப் போவாங்க. தர்மபுரம் சாமிகாத ஒதுவார்தான் லீடர். அப்புறம் நாதஸ்வரக்காரங்க கோஷ்டி கோஷ்டியா வச் றாங்க. அவங்களுக்கு திருப்பதி ஆஸ்தான வித்வான் காமகிரிப்பேட்டை கிருஷ்ணன் தான் லீடர்' 'வாஷிங்டனுக்கே போய் வந்தவரா ச்சே! சக்கனிராஜ சக்கைப்போடு போடுவாரே, அப்புறம்? வேற யார் யார் வராங்க?" - - "திருவிழா ஜெயசங்கர்." 'பொருத்தம்தான். இதுவும் ஒரு திருவிழா தானே!" "அப்ப... தேருக்கு முன்னால் ஒதுவார்கள். அவங்களுக்குப் பின்னால ஊதுவார்களா? பலே, பல்ே' என்றார் புள்ளி.

ஜப்பான்காரனுக்கு வடம் பிடிச்சு இழக்கத் தெரியுமோ?' என்று ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார் முத்து. -

"ஜப்பான்லேயே இந்த மாதிரி தேர்த் திருவிழா எல்லாம் உண்டு. ஏறத்தாழ 5ம் ஊர் மாதிரியே இருக்கும்' . இத்தனை பூண்டு மீன்குஞ்சு மாதிரி ஒரு சின்ன நாடு இது போன யுத்தத்தில ஹிரோஷிமாவை அணுகுண்டு போட்டுத் தரைமட்டமாக்கிட்டாங்க." "அணுகுண்டு விழுந்த நேரம் 1945 ஆகஸ்ட் ஆறாம் தேதி காலை எட்டேகால் மணிக்கு" என்று விவரித்தார் புள்ளி சுப்புடு. "அதுக்கப்புறம் என்னமா வளர்ந்துட்டான் பார்த்தீங் asets i” 'உலகம் பூரா ஜப்பான் சாமான்தான். கா மி ரா, வாச் டிரான்ஸிஸ்டர், டி.வி. வீடியோன் னு எல்லாமே மேட் இன் ஜப்பான்தான், இப்ப அமெரிக்காவுக்கு காரே பண்ணி' அனுப்பறாங்க, இண்டியாவுக்குப் புடவை கரும்பு, இரும்பு இந்த ரெண்டுமே காட்டில் கிடையாது. ஆனா, கரும்பு இறக்குமதி பண்ணி சர்க்கரை பண்றான். இரும்பு வரவழைச்சு எஃகு பண்றான்! இத்தனை வித்தையும் தெரிஞ்சவனுக்குத் தேர் இழுக்கறதா பிரமாதம்! ஜப்பான் க்களெல்லரம் ஒண்ணா, ஒற்றுமையா ஒருமுகமா பாடுபட்டு, இந்த தேசத்தையே ஒரு தேர் மாதிரி இழுத்துக்கிட்டுப் போய் முன்னணியிலே கிறுத்திட் டாங்களே!' - "கல்லாச் சொன்னிங்க. தேர் இழுக்க ஆள் வேணும்னா குண்டு குண்டா ஸுமோ பயில்வரின்களையே அனுப்பி 17