பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாேட விமான கூடம் ஜே ஜே என்று பரபரத்தது. இன்னும் சிறிது நேரத்தில் ஏர் இண்டியாவில் வந்து இறங்கப் போகும் இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணனை வரவேற்று, அரண்மனைக்கு அழைத்துச் செல்ல ஜப்பான் சக்ரவர்த்தி தமது அந்தரங்கக் காரியதரிசி மிஸ்டர் யோஷினாரி யையும், அவருக்குத் துண்ையாக விழா வேந்தன் முத்து, புள்ளி சுப்புடு இருவரையும் விமான கூடத்துக்கு அனுப்பி,வைத்திருந்தார். காரியதரிசி முன் வீட்டிலும் இவர்கள் பின் வீட்டிலும் உட்கார ரோல்ஸ்ராய்ஸ் நரீடாவை நோக்கிப் பறந்தது. "ரோல்ஸ் ராய்ஸ் கார்ல போறதுக்கு அதுவும் ஜப்பான் ரோடில் போறதுக்குக் கொடுத்து வச்சிருக்கணும். எல்லாருக்கும் கிடைச்சுருமா இந்த அதிர்ஷ்டம்' என்று மகிழ்ந்தார் முத்து. "இங்கே ரோல்ஸ்ராய்ஸ், கம் ஊரில் ரோல்ஸ்காய்ஸ்!" என்று சிரித்தார் புள்ளி. விமானம் வர இன்னும் அரை மணி ஆகுமாம். அதுக்குள்ளே கொஞ்ச க ம .ாப்பிங் பண்ணுவமா?' என்று கேட்டார் முத்து. "ஏர்போர்ட்ல எக்கச்சக்க விலை...!" 'நான் சொல்றது விண்டோ ஷாப்பிங் கண்ணால பாக்கறதோடு சரி ஒரு காப்பி மட்டும் சாப்பிடலாம்!' வேணாம், கையைச் சுட்டுரும்!" 80