பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன சிரிக்கிறீங்க?' என்று கேட்டார் புள்ளி. “பொதுக் குளியல் இடத்துக்குப் போயிட்ட இந்த ஜட்டியைக்கூட எடுத்துருவாங்க, சர்வம் முழு கிர்வாண மயம்தான்! உமக்கு தைரியம் இருக்கா?' என்று கேட்டார் ஷ்ோஜோ. "தைரியம் எனக்கு வேணாம்யர். பாக்கறவங்களுக்குத்தான் வேணும்' என்றார் புள்ளி. . - - "சரி; முதல்ல ருமுக்குள்ளயே ஒரு குளியல் போட்டு உடம்பை சுத்தப்படுத்திக்குங்க. அப்புறம் மஸாஜ் அப்புறம் ஸ்டிம்பாத். கடைசியாத்தான் பொதுக் குளியல். இதோ போய் மஸாஜாக்கு ஆள் அழைச்சிட்டு வந்துடறேன்' என்று சொல்லிப் புறப்பட்டார் ஷோஜோ. • , “மஸாஜுக்கு யார் வராங்க? ஆணா, பெண்ணா?” "உங்களுக்கு யார் வேணும்' .* - - "ஆம்பளையாப் பார்த்து அழைச்சிட்டு வாங்க; என் மனைவியைத் தவிர என்னை வேற எந்தப் பொண்ணும் தொட்டதில்லே.' * , 'அப்படின்னா நீங்க அறையிலயே இருங்க. இதோ அழைச்சிட்டு வந்துடறேன்!" a ரிஸப்ஷன் கெளண்ட்டருக்குப் போனார். ஷோ ஜோ. அங்கே கொழுக்கட்டை கொழுக்கட்டையாய் மஸாஜ் பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருத்தி பெண் மாதிரியும் இருந்தாள். ஆண் மாதிரியும் இருக்தாள். ஷோஜோ அவளைத் தேர்ந்தெடுத்து புள்ளி தங்கியிருந்த அறைக்கு அழைத்துப் போய் “இதோ மஸாஜுக்கு ஆள் வந்திருக்கு" என்றார். 'வந்திருக்குன்னா என்ன அர்த்தம்? வந்திருக்கானா? அல்லது வந்திருக்காளா? இந்த ஜப்பானில் யாரைப் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்காங்க ஆண் பெண் வித்தியாசமே தெரியலே! இது ஆணா, பெண்ணா?' என்று கேட்டார் புள்ளி. "ஆண்தான்; பார்த்தால் தெரியலையா?' என்று கேட்டு விட்டு வெளியேறிவிட்டார் ஷோ ஜோ. - ; : - அந்தப் பெண் உள்பக்கம் கதவைச் சாத்திக் கொண்டாள். முதலில் புள்ளியைத் தலைகுப்புறக் கவிழ்ந்து படுக்கச் சொன்னாள். பிறகு அவரது உடைகளை ஒவ்வொன்றாய் உரித்தெடுத்து முதுகையும் தோள்களையும் இதமாகவும் இறுக்க மாகவும் பிடித்துவிட்டாள். - . 50