பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்து, உடம்பு முழுதும் தைலம் தடவி அப்பளமாவைப் பிசைவதுபோல் பிசைந்து பிடரி கரம்புகளைச் சுண்டிவிட்டுக் கடைசியாக முதுகு முழுதும் பரவலாக கும் கும்' என்று தபால் முக்திரை குத்துவதுபோல் குத்தினாள். 'அம்மாடா என்ன சுகம்' என்று வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருந்தபோது இன்னொரு கும் விழுந்தது! புள்ளிக்குச் சந்தேகமாயிருந்தது. "ஒரு பெண்ணின் கைபோல் மிருதுவாக இருக்கிறது. அதே சமயம், குத்துவிழும் வேகத்தைப் பார்த்தால் ஒரு ஆண் போலவும் இருக்கிறது' என்று எண்ணியவர் மெதுவாக ஓரக் கண்ணால் மார்பை கவனித்தார். அவ்வளவு எடுப்பாக இல்லை. ஆண் போலவும் இருந்தது. பெண் போலவும் இருந்தது. காதில், முக்கில் கழுத்தில் எந்த அணிகலனும் இல்லை. அரை நிஜாரும் க்லர்ச் சட்டையும் அணிக் திருந்ததால், அது இருபாலாருக்கும் பொதுவான டிரஸ் என்பதால் நிச்சயப்படுத்த முடியவில்லை. புள்ளி குழம்பிப் போனார். குப்புறப் படுத்திருந்த புள்ளியின் ஜட்டியைக் கொஞ்சம் கொஞ்ச மாய் விலக்கி, தைலம் பூசித் தேய்த்து விட்டாள் அந்த மஸாஜ் பெண். கூச்சத்தில் புள்ளி நெளிந்தார். - "உன் பேர் என்ன?' என்று கேட்டார். "அயோகா!' 'ஆண் பேராய்த்தான் இருக்கணும். கா வில் முடிகிறதே? பெண் ப்ேராயிருந்தால் அயோகி என்று கி யில் முடியுமே மலாஜ் முடிந்ததும் அந்தப் பெண் கையைத் கழுவிக் கொண்டு "நீங்கள் எழுந்து ஸ்டீம் பாத்துக்குப் போகலாம். ஸ்டீம்பாத், ரொம்ப சூடாக இருக்கும். ஜாக்கிரதை' என்று எச்சரித்துவிட்டுப் போனாள். " . . - புள்ளி வெளியே எட்டிப் பார்த்தபோது ஷோஜோ குறும்பாகச் சிரித்தபடி "மஸாஜ் எப்படி?" என்று கேட்டார்.

பிரமாதம்' என்றார் புள்ளி.

இப்ப வந்தது யார் தெரியுமா?" என்று கேட்ட் ஷோஜோ பலம்ாகச் சிரித்தபோதுதான் புள்ளிக்குப் புரிந்தது. "ஐயையோ வந்தவள் பெண்ணா? என் மானம்ே போச்சு. நினைச்சாலே வெட்கமாயிருக்கு? ஆண் என்று பொய் சொல்வி என்னை ஏமாத்திட்டீங்களே ஜட்டியெல்லாம். கழட்டி என்னைப் பிறந்த மேனிக்குத் தோல் உரிக்கிற மாதிரி உரிச்சு, சீ வெட்கம், வெட்கம்' என்று தலையிலடித்துக்கொண்டார். 51